கேலோ இந்திய குளிர்கால விளையாட்டு 2021: 2வது முறையாக தங்கம் வென்றார் ஆஞ்சல் தாகூர்

Published : Mar 02, 2021, 04:58 PM IST
கேலோ இந்திய குளிர்கால விளையாட்டு 2021: 2வது முறையாக தங்கம் வென்றார் ஆஞ்சல் தாகூர்

சுருக்கம்

2வது கேலோ இந்திய குளிர்கால விளையாட்டு 2021ல் 2வது முறையாக தங்கம் வென்றார் பனிச்சறுக்கு வீராங்கனை ஆஞ்சல் தாகூர்.  

2வது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு 2021 கடந்த பிப்ரவரி 26ம் தேதி தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி இந்த விளையாட்டு தொடரை காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

விளையாட்டுத்துறையில் ஜம்மு காஷ்மீருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக இந்த விளையாட்டு போட்டிகள் ஜம்மு காஷ்மீரில் நடந்துவருகிறது. இந்தியா முழுவதிலிருமிருந்து விளையாட்டு வீரர்கள் ஜம்மு காஷ்மீருக்கு வந்து கலந்துகொண்டனர்.

இதில் பனிச்சறுக்கு போட்டியில் வழக்கம்போலவே மிகச்சிறப்பாக விளையாடி 2வது முறையாக தங்கம் வென்றார் ஆஞ்சல் தாகூர். ஏற்கனவே ஒருமுறை தங்கம் வென்றுள்ள ஆஞ்சல் தாகூர், 2வது முறையாக தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

ஆஞ்சல் தாகூர் அண்மையில், இத்தாலியில் நடந்த உலக பனிச்சறுக்கு சாம்பியன்ஷிப்பில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!