அஷ்வினை ஒருநாள் அணியிலும் எடுப்பது இந்திய அணிக்கு நல்லது..! அஷ்வினுக்காக குரல் கொடுக்கும் ஆஸ்திரேலியர்

By karthikeyan VFirst Published Mar 1, 2021, 10:50 PM IST
Highlights

இந்திய ஒருநாள் அணியில் அஷ்வினை எடுக்க வேண்டும் என்று ஆஸி., முன்னாள் ஸ்பின்னர் பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார். 
 

இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின். தோனி தலைமையிலான இந்திய அணியில் முதன்மை ஸ்பின்னராக இருந்த அஷ்வின், குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் வருகைக்கு பின்னர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சேர்க்கப்படவேயில்லை. 

111 ஒருநாள் போட்டிகளில் ஆடி 150 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், 46 டி20 போட்டிகளில் ஆடி 52 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2017ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஆடியதுதான் கடைசி. அதன்பின்னர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியில் அஷ்வின் சேர்க்கப்படவேயில்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னணி ஸ்பின்னராக திகழ்ந்து, விக்கெட்டுகளை வீழ்த்தி குவிப்பதுடன் சாதனைகளையும் படைத்துவருகிறார்.

ஆஸி., மண்ணில் அசத்திய அஷ்வின், இங்கிலாந்துக்கு எதிராகவும் அசத்திவரும் நிலையில், அவரை மீண்டும் வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளில் சேர்ப்பது குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவிப்பதால் அது விவாதமாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், அஷ்வினை ஒருநாள் கிரிக்கெட் அணியில் சேர்க்க வேண்டுமா, கூடாதா என்பது குறித்து ஆஸி., முன்னாள் ஸ்பின்னர் பிராட் ஹாக்கிடம் ரசிகர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த பிராட் ஹாக், அஷ்வினை ஒருநாள் அணியில் சேர்ப்பது மிகச்சிறந்த ஆப்சன். பேட்டிங்கிலும் டெப்த் அதிகரிக்கும்; அதனால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கூடுதல் ஆக்ரோஷத்துடன் ஆரம்பத்திலிருந்து அடித்து ஆடமுடியும். பவுலிங்கிலும், ரன்னை கட்டுப்படுத்தி விக்கெட்டும் வீழ்த்தக்கூடிய பவுலர் அஷ்வின் என்று பிராட் ஹாக் தெரிவித்தார்.

click me!