சதம் அடித்து சாதனை படைத்த 2ஆவது வீரரான ஜிம்பாப்வேயின் கேரி பேலன்ஸ்!

Published : Feb 08, 2023, 03:52 PM IST
சதம் அடித்து சாதனை படைத்த 2ஆவது வீரரான ஜிம்பாப்வேயின் கேரி பேலன்ஸ்!

சுருக்கம்

இரு நாடுகளுக்காக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 2ஆவது வீரர் என்ற பெருமையை ஜிம்பாப்வே அணியின் கேரி பேலன்ஸ் பெற்றுள்ளார்.  

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான பயிற்சி போட்டி டிராவில் முடிந்த நிலையில், தற்போது இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியில் தேஜ்நரின் சந்தர்பால் மற்றும் பிராத்வெயிட் இருவரும் முதலில் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 336 ரன்கள் குவித்தது. சந்தர்பால் 207 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார். பிராத்வெயிட் 182 ரன்கள் எடுத்தார்.

மைதானம் யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாக்பூரில் மழை வருமா? 

வெஸ்ட் இண்டீஸ் அணி ஜிம்பாப்வே சுற்றுபயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு நாடுகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த பிப்ரவரி 4ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன் அடிப்படையில், தொடக்க வீரராக தேஜ்நரின் சந்தர்பாலும், பிராத்வெயிட்டும் களமிறங்கினர்.  முதல் விக்கெட்க்கு சிறப்பாக ஆடிய இந்த ஜோடி 336 ரன்கள் குவித்தனர். சந்தர்பால் 207 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார். பிராத்வெயிட் 182  ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 143 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 447 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

தோற்றாலும் அரையிறுதிப் போட்டிக்கு சென்ற பார்ல் ராயல்ஸ் - மீண்டும் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியுடன் மோதல்!

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் இன்னசண்ட் கையே 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்காக விளையாடிய கேரி பேலன்ஸ் முதல்முறையாக ஜிம்பாப்வே அணிக்காக டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். கேரி பேலன்ஸ் தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார்.

சதம், சதமா அடிக்கணும், இந்தியா ஜெயிக்கணும்: கேஎல் ராகுல் வேண்டுதல்!

அவர் சதம் அடித்ததன் மூலமாக இரு நாடுகளுக்காக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 2ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னதாக தென் ஆப்பிரிக்காவின் கெப்லர் வெசல்ஸ் இந்த சாதனையை படைத்திருந்தார். கெப்லர், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஆஸ்திரேலியாவுக்காக 4 சதமும், தென் ஆப்பிரிக்காக 2 சதமும் அடித்துள்ளார் எனப்து குறிப்பிடத்தக்கது.

கெப்லரைப் போன்று கேரி பேலன்ஸ் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 4 சதங்களும், ஜிம்பாப்வே அணிக்காக ஒரு சதமும் அடித்துள்ளார். இன்னும் 2 சதங்கள் அடித்தால் 2 நாடுகளுக்காக டெஸ்ட் போட்டியில் பங்கேற்று அதிக டெஸ்ட் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.

புதிய காற்றை சுவாசிப்பது ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்: வீடு திரும்பிய ரிஷப் பண்ட்!

இந்தப் போட்டியில் கேரி பேலன்ஸ் 137 ரன்கள் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஜிம்பாப்வே அணி 125 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 379 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 5 ஆம் நாளான இன்று வெஸ்ட் இண்டீஸ் 2ஆவது இன்னிங்ஸை ஆடி வருகிறது. தற்போது வரையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

IND vs SA T20: ஆல்ரவுண்டர் விலகல்.. இந்திய அணிக்கு பின்னடைவு.. மாற்று வீரர் இவரா? ரசிகர்கள் ஷாக்!
பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி பந்து வீச தடை.. பாதியில் பந்தை புடுங்கிய நடுவர்.. என்ன நடந்தது?