புதிய காற்றை சுவாசிப்பது ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்: வீடு திரும்பிய ரிஷப் பண்ட்!

By Rsiva kumarFirst Published Feb 8, 2023, 1:50 PM IST
Highlights

கார் விபத்தில் சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது வீடு திரும்பிய நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
 

கார் விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் டேராடூன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, எலும்பியல் மருத்துவரான டின்ஷாவின் மேற்பார்வையின் கீழ் ரிஷப் பண்டிற்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சதம், சதமா அடிக்கணும், இந்தியா ஜெயிக்கணும்: கேஎல் ராகுல் வேண்டுதல்!

இதையடுத்து, தனக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்றும், தனக்கு ஆதரவும், வாழ்த்துக்களும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்றும், பிசிசிஐ, ஜெய் ஷா மற்றும் அரசு அதிகாரிகளுக்கும், அவர்களது ஆதரவிற்கும் நன்றி என்று ரிஷப் பண்ட் டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமின்றி, உங்கள் அனைவரையும் களத்தில் காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் என்னால் தனித்தனியாக நன்றி சொல்ல முடியாமல் போயிருக்கலாம். ஆனால், எனது விபத்தின் போது எனக்கு உதவிய இந்த 2 ஹீரோக்களையும் நான் பாராட்டியாக வேண்டும். அவர்கள் மூலமாக நான் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு சென்றேன். ரஜத் குமார் மற்றும் நிஷு குமார் ஆகியோருக்கு நன்றி. நான் என்றென்றும் நன்றியுடையவனாகவும், கடமைப்பட்டவனாகவும் இருப்பேன் என்று பதிவிட்டிருந்தார்.

ஜனவரிக்கான ஐசிசி விருது: பரிந்துரை பட்டியலில் சுப்மன் கில், முகமது சிராஜ்!

இந்த நிலையில், ரிஷப் பண்ட் எப்போது வீடு திரும்புவார், மறுபடியும் எப்போது விளையாடுவார் என்பது குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் 2 வாரங்களில் அவர் வீடு திரும்புவார். இன்னும் 2 மாதங்களுக்குள்ளாக அவர் காயத்திலிருந்து மீள்வதற்கு முயற்சி செய்யலாம். தசைநார்களில் பெரிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், காயம் அடைந்த தசைநார்கள் இயற்கையாகவே குணமடைகிறதா? இல்லையா என்பதை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

தோற்றாலும் அரையிறுதிப் போட்டிக்கு சென்ற பார்ல் ராயல்ஸ் - மீண்டும் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியுடன் மோதல்!

தசைநார்கள் அதிகளவில் காயம் அடைந்திருந்தன. கவலைக்கு இதுவே அதிக காரணமாகவும் இருந்தது. தற்போது தசைநார்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இனிமேல் அறுவை சிகிச்சை தேவைப்படாது என்று மருத்துவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, இன்னும் 2 வாரங்களில் அவர் வீடு திரும்புவார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், ஒரு மாதத்திற்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது வீடு திரும்பியுள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: வெளியில் அமர்ந்து காற்றை சுவாசிப்பது ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியாவின் ஆடும் லெவன் இதோ - வாசீம் ஜாஃபர் கணிப்பு!

 

click me!