ஜனவரிக்கான ஐசிசி விருது: பரிந்துரை பட்டியலில் சுப்மன் கில், முகமது சிராஜ்!

By Rsiva kumarFirst Published Feb 8, 2023, 11:14 AM IST
Highlights

ஜனவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் சுப்மன் கில் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
 

மாதந்தோறும், ஆண்டுதோறும் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் ஐசிசி விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்தது. இதில், நியூசிலாந்து அணியின் டெவோன் கான்வே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மகளிருக்கான 2ஆவது பயிற்சி போட்டி - இந்தியா - வங்கதேசம் மோதல்!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் சுப்மன் கில் 208 ரன்கள் குவித்தார். 3ஆவது ஒரு நாள் போட்டியில் 112 ரன்கள் எடுத்தார். இதே போன்று 3ஆவது டி20 போட்டியில் சுப்மன் கில் 126 ரன்கள் குவித்தார். இப்படி ஒவ்வொரு போட்டியிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.

தோற்றாலும் அரையிறுதிப் போட்டிக்கு சென்ற பார்ல் ராயல்ஸ் - மீண்டும் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியுடன் மோதல்!

இந்த நிலையில், கடந்த மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் பேட்டிங்கில் சுப்மன் கில் இடம் பெற்றுள்ளார். இதே போன்று ஐசிசி ஒரு நாள் போட்டிக்கான பௌலர்களின் தரவரிசைப் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் முகமது சிராஜ் ஜனவரி மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் முகமது சிராஜ் இடம் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்திய அணியில் முகமது சிராஜ் இடம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு வங்கதேசத்திற்கான எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியாவின் ஆடும் லெவன் இதோ - வாசீம் ஜாஃபர் கணிப்பு!

பாகிஸ்தானில் நடந்த டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3 சதம், 2 அரை சதம் அடித்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்தின் டெவோன் கான்வே ஐசிசி சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

வீரர்களைத் தொடர்ந்து வீராங்கனைகளும் ஐசிசி சிறந்த வீராங்கனைகளுக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியாவின் பெத் மூனி, போப்பே லிட்ச்பீல்ட் மற்றும் இங்கிலாந்தின் கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ் ஆகியோர் பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியாவை வெல்ல இந்தியா என்ன செய்ய வேண்டும்? அருமையான் ஐடியா கொடுத்த ரவி சாஸ்திரி!

click me!