மகளிருக்கான 2ஆவது பயிற்சி போட்டி - இந்தியா - வங்கதேசம் மோதல்!

By Rsiva kumarFirst Published Feb 8, 2023, 9:59 AM IST
Highlights

இந்தியா மகளிர் மற்றும் வங்கதேச மகளிர் அணிகளுக்கு இடையிலான 2ஆவது பயிற்சி போட்டி இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது.
 

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 10 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையில் தென் ஆப்பிரிக்காவில் நடக்கிறது. இந்தப் போட்டியில் 10 அணிகள் பங்கு பெற்றுள்ளன. மொத்தம் 23 போட்டிகள் நடக்கிறது. 10 அணியும் குரூப் ஏ, குரூப் பி என்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் 4 போட்டிகளில் விளையாட வேண்டும். ஒவ்வொரு குரூப்பிலிருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். அதன் பிறகு 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுகளில் போட்டி போடும். கடந்த முறை டைட்டில் வென்ற ஆஸ்திரேலியா இந்த முறையும் வெற்றி பெறும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறது.

தோற்றாலும் அரையிறுதிப் போட்டிக்கு சென்ற பார்ல் ராயல்ஸ் - மீண்டும் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியுடன் மோதல்!

டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பயிற்சி போட்டிகள் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் பயிற்சி போட்டியில் இந்திய மகளிர் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலிய பெண்கள் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, 130 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இந்திய மகளிர் அணி 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 44 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியாவின் ஆடும் லெவன் இதோ - வாசீம் ஜாஃபர் கணிப்பு!

இதே போன்று பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான முதல் பயிற்சி போட்டியில் வங்கதேச மகளிர் அணி தோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து இந்தியா மகளிர் மற்றும் வங்கதேச மகளிர் அணிகளுக்கு இடையிலான 2ஆவது பயிற்சி போட்டி இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. 

வங்கதேச அணி:

நிகார் சுல்தானா (கேப்டன், விக்கெட் கீப்பர்), சல்மா கடூன், ஷோபனா மோஸ்டாரி, நகிடா அக்டெர், ஷோர்னா அக்டெர், ஜஹனரா அலாம், திஷா பிஸ்வாஸ், ஃபஹிமா கடூன், முர்ஷிதா கடூன், ருமானா அஹ்மது, லடா மோண்டல், ருது மோனி, மருஃபா அக்டெர், ஷமிமா சுல்தானா, ஃபர்ஹானா ஹோக்

இந்திய அணி:
 
ஹர்மன்ப்ரீத் கவூர் (கேப்டன்) ஸ்மிருதி மந்தனா,  ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, தேவிகா வைத்யா, ராதா யாதவ், ரேணுகா தாக்கூர், அஞ்சலி சர்வானி, பூஜா வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கயக்வாட், ஷிகா பாண்டே

ஆஸ்திரேலியாவை வெல்ல இந்தியா என்ன செய்ய வேண்டும்? அருமையான் ஐடியா கொடுத்த ரவி சாஸ்திரி!

இந்திய போட்டிகள்:
 
பிப்ரவரி 12 - இந்தியா vs பாகிஸ்தான் - மாலை 6:30
 
பிப்ரவரி 15 - இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் - மாலை 6:30
 
பிப்ரவரி 18 - இந்தியா vs இங்கிலாந்து - மாலை 6:30
 
பிப்ரவரி 20 - இந்தியா vs அயர்லாந்து - மாலை 6:30
 
ஒவ்வொரு குழுவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டியில் மோதும். இறுதிப் போட்டி வரும் 26 ஆம் தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை டிஸ்னி+ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் காணலாம்.

click me!