பாகிஸ்தானை கடைசி பந்தில் வீழ்த்தி ஒரு ரன்னில் ஜிம்பாப்வே த்ரில் வெற்றி! T20 World Cup-ஐ விட்டு வெளியேறும் பாக்

By karthikeyan V  |  First Published Oct 27, 2022, 8:49 PM IST

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் டி20 உலக கோப்பை அரையிறுதி வாய்ப்பை பாகிஸ்தான் அணி கிட்டத்தட்ட இழந்துவிட்டது.
 


டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், க்ரூப் 2-ல் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் அணி, முதல் போட்டியில் இந்தியாவிடம் கடைசி பந்தில் தோல்வியடைந்த நிலையில், அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஜிம்பாப்வேவை இன்று எதிர்கொண்டது பாகிஸ்தான் அணி.

சிட்னியில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

Tap to resize

Latest Videos

undefined

பாகிஸ்தான் அணி:

முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), ஷான் மசூத், இஃப்டிகார் அகமது, ஷதாப் கான், ஹைதர் அலி, முகமது நவாஸ், முகமது வாசிம், ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா.

Asianet Exclusive: இஸ்தான்புலில் ஐபிஎல் ஏலமா..? யார் சொன்னது..? ஐபிஎல் சேர்மன் அருண் துமால் திட்டவட்ட மறுப்பு

ஜிம்பாப்வே அணி:

வெஸ்லி மாதவெர், க்ரைக் எர்வின் (கேப்டன்), மில்டன் ஷும்பா, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, ரெஜிஸ் சகாப்வா (விக்கெட் கீப்பர்), ரியான் பர்ல், லூக் ஜாங்வே, ப்ராட் இவான்ஸ், ரிச்சர்ட், ப்ளெஸ்ஸிங் முசாரபாணி.

முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்கள் மாதவெர்(17), க்ரைக் எர்வின் (19) ஆகிய இருவரும் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். பவர்ப்ளேயில் அடித்து ஆடி முதல் விக்கெட்டுக்கு 5 ஓவரில் 42 ரன்கள் விளாசினர். அதன்பின்னர் வில்லியம்ஸ் 31 ரன்கள் அடித்தார். கடைசியில் இவான்ஸ் 15 பந்தில் 19 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 130 ரன்கள் அடித்தது பாகிஸ்தான் அணி.

131 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு அந்த இலக்கை எளிதாக காட்டவில்லை ஜிம்பாப்வே அணி. ஜிம்பாப்வே பவுலர்கள் தொடக்கம் முதலே பாகிஸ்தான் வீரர்களை கட்டுக்குள் வைத்திருந்தனர். எளிதாக ரன் அடிக்க அனுமதிக்கவில்லை. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான பாபர் அசாமை வெறும் 4 ரன்னில் 4வது ஓவரில் முசாரபாணி வீழ்த்திய நிலையில், அடுத்த ஓவரிலேயே முகமது ரிஸ்வானை 14 ரன்களுக்கு வீழ்த்தினார் இவான்ஸ்.

பாகிஸ்தான் அணி பேட்டிங்கை பொறுத்தமட்டில் இவர்கள் இருவரைத்தான் அதிகமாக சார்ந்திருக்கிறது. அவர்கள் இருவரையும் பவர்ப்ளேயிலேயே வீழ்த்திவிட்டது ஜிம்பாப்வே அணி. அதன்பின்னர் இஃப்டிகார் அகமது (5), ஷதாப் கான்(17), ஹைதர் அலி(0) ஆகிய மூவரும் ஏமாற்றமளித்தனர். இவர்களில் ஷதாப் கான் மற்றும் ஹைதர் அலி ஆகிய இருவரையும் சிக்கந்தர் ராசா வீழ்த்தினார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஷான் மசூத்தை 44 ரன்களுக்கு 16வது ஓவரில் வீழ்த்தினார் சிக்கந்தர் ராசா. கடைசி 5 ஓவரில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு வெறும் 38 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டபோதிலும், முசாரபாணி, இவான்ஸ் ஆகிய இருவரும் அபாரமாக பந்துவீசி ரன்னை கட்டுப்படுத்தினர். ஜிம்பாப்வே வீரர்கள் மிக மிக அபாரமாக ஃபீல்டிங் செய்தனர்.

கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட அந்த ஓவரை இவான்ஸ் வீசினார். முதல் பந்தை நவாஸ் பவுண்டரிக்கு அடிக்க, அதை எர்வின் விரட்டிச்சென்று தடுத்தார். அதனால் அந்த பந்தில் 3 ரன்கள் கிடைத்தது. 2வது பந்தில் பவுண்டரி அடித்த முகமது வாசிம், 3வது பந்தில் ஒரு ரன் அடித்தார். 4வது பந்தில் ரன் அடிக்காத நவாஸ், 5வது பந்தில் ஆட்டமிழந்தார். 

கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட, அந்த பந்தை அடித்துவிட்டு, ஒரு ரன் ஓடிய ஷாஹீன் அஃப்ரிடி 2வது ரன்னை ஓடி முடிக்கமுடியாமல் ரன் அவுட்டானார். இதையடுத்து கடைசி பந்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது ஜிம்பாப்வே அணி. 

 டி20 உலக கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி புள்ளி பட்டியலில் இந்தியா முதலிடம்

க்ரூப் 2-ல் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக 2 தோல்விகள் அடைந்துள்ளது. இன்னும் 3 போட்டிகள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், அதில் தென்னாப்பிரிக்காவையும் எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், இனிமேல் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறுவது மிகக்கடினம். பாகிஸ்தான் அணி கிட்டத்தட்ட டி20 உலக கோப்பையிலிருந்து வெளியேறிவிட்டது.
 

click me!