டி20 உலக கோப்பை: பாகிஸ்தான் - ஜிம்பாப்வே போட்டி டாஸ் ரிப்போர்ட்! முக்கியமான போட்டியில் டாஸ் தோற்ற பாகிஸ்தான்

By karthikeyan VFirst Published Oct 27, 2022, 4:41 PM IST
Highlights

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் முக்கியமான போட்டியில் வெற்றி கட்டாயத்துடன் ஜிம்பாப்வேவை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
 

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. இன்று க்ரூப் 2-ல் இடம்பெற்றுள்ள 6 அணிகளும் ஆடிய 3 போட்டிகள் நடக்கின்றன. இன்று நடந்த முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வங்கதேசத்தையும், இந்திய அணி நெதர்லாந்தையும் வீழ்த்தி வெற்றி பெற்றன.

க்ரூப் 2 புள்ளி பட்டியலில் இந்திய அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென்னாப்பிரிக்க அணி 3 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும் உள்ளன. தென்னாப்பிரிக்காவிடம் தோற்றிருக்க வேண்டிய ஜிம்பாப்வே அணி மழையால் அதிர்ஷ்டவசமாக ஒரு புள்ளியை பெற்ற நிலையில், இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் அணி, முதல் வெற்றியை எதிர்நோக்கியுள்ள நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஆடிவருகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நிகராக வீராங்கனைகளுக்கும் ஊதியம்..! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

க்ரூப் 2-ல் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் அபாரமாக ஆடி புள்ளிகளை பெற்றுவருவதால் பாகிஸ்தான் அணி பெரிய வெற்றியை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஆடிவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணி ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை மேலும் வலுப்படுத்தும் விதமாக ஆசிஃப் அலியை நீக்கிவிட்டு, 4வது ஃபாஸ்ட் பவுலராக முகமது வாசிமை சேர்த்துள்ளது.

டி20 உலக கோப்பையில் கிறிஸ் கெய்லின் சாதனையை காலி செய்த கோலி..! அடுத்த டார்கெட் ஜெயவர்தனே

பாகிஸ்தான் அணி:

முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), ஷான் மசூத், இஃப்டிகார் அகமது, ஷதாப் கான், ஹைதர் அலி, முகமது நவாஸ், முகமது வாசிம், ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா.
 

click me!