டி20 உலக கோப்பையில் கிறிஸ் கெய்லின் சாதனையை காலி செய்த கோலி..! அடுத்த டார்கெட் ஜெயவர்தனே

By karthikeyan V  |  First Published Oct 27, 2022, 3:43 PM IST

டி20 உலக கோப்பையில் கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்துள்ளார் விராட் கோலி.
 


சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், இடையில் 3 ஆண்டுகளாக பெரியளவில் ஃபார்மில் இல்லாமலும் சதம் அடிக்காமலும் இருந்துவந்தார்.

ஆசிய கோப்பையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், 3 ஆண்டுகளுக்கு பிறகு சதமடித்த விராட் கோலியின் முதல் சர்வதேச டி20 சதம் அது. ஆசிய கோப்பையில் அசத்திய விராட் கோலி, அவரது சிறப்பான ஃபார்மை டி20 உலக கோப்பையிலும் தொடர்ந்துவருகிறார்.

Latest Videos

undefined

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நிகராக வீராங்கனைகளுக்கும் ஊதியம்..! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங் சாதனைகளை மீண்டும் முறியடிக்க தொடங்கியிருக்கிறார். டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் சூப்பர் 12 சுற்று போட்டியில் 53 பந்தில் 82 ரன்களை குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவி, ஆட்டநாயகன் விருதை வென்றார் விராட் கோலி.

நெதர்லாந்துக்கு எதிரான இன்றைய போட்டியிலும் அபாரமாக பேட்டிங் ஆடிய கோலி, ரோஹித் மற்றும் சூர்யகுமார் யாதவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக பேட்டிங் ஆடினார். ரோஹித்துடன் 2வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கோலி, சூர்யகுமாருடன் 3வது விக்கெட்டுக்கு 95* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

நெதர்லாந்துக்கு எதிராக அபாரமாக பேட்டிங் ஆடி 62 ரன்களை குவித்த விராட் கோலி, டி20 உலக கோப்பையில் 989 ரன்களை குவித்துள்ளார். டி20 உலக கோப்பையில் 23 போட்டிகளில் 21 இன்னிங்ஸ்களில் பேட்டிங் ஆடி 989 ரன்களை கோலி குவித்துள்ளார். இதன்மூலம் டி20 உலக கோப்பையில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் 2ம் இடத்தில் இருந்த கிறிஸ் கெய்லை (965 ரன்கள்) பின்னுக்குத்தள்ளி கோலி (989*) 2ம் இடம் பிடித்துள்ளார்.

டி20 உலக கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி புள்ளி பட்டியலில் தென்னாப்பிரிக்கா முதலிடம்

இந்த பட்டியலில் இலங்கை முன்னாள் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே 1016 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி 28 ரன்கள் அடித்தால் ஜெயவர்தனேவின் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்துவிடுவார்.
 

click me!