இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நிகராக வீராங்கனைகளுக்கும் ஊதியம்..! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

By karthikeyan VFirst Published Oct 27, 2022, 2:02 PM IST
Highlights

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நிகராக வீராங்கனைகளுக்கும் ஊதியம் வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
 

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையேயான ஊதிய ஏற்றத்தாழ்வுகள் அனைத்து துறைகளிலும் களையப்பட்டுவருகிறது. ஒரேமாதிரி வேலைக்கு ஒரேமாதிரி ஊதியம் என்பதுதான் நியாயமாக இருக்கமுடியும். ஒரேமாதிரி வேலைக்கு ஆண் - பெண் என வேறுபடுத்தி ஊதியம் கொடுப்பது சரியல்ல.

இது அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்பட்டுவரும் நிலையில், கிரிக்கெட்டிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை கிரிக்கெட் வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் இடையே ஊதிய வித்தியாசம் இருந்துவந்தது. 

டி20 உலக கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி புள்ளி பட்டியலில் தென்னாப்பிரிக்கா முதலிடம்

பிசிசிஐ புதிய தலைவராக ரோஜர் பின்னி பொறுப்பேற்றுள்ள நிலையில், வீரர் - வீராங்கனைகளுக்கு இடையேயான ஊதிய ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் அதே போட்டி ஊதியம் வீராங்கனைகளுக்கும் வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

சேஸிங்கில் நான் “கிங்”டா.. மெல்பர்னில் பாகிஸ்தானை பட்டாசாக வெடித்து தீபாவளி கொண்டாடிய கோலி

அதன்படி, இனிமேல் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சம், ஒரு ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சமும், ஒரு டி20 போட்டிக்கு ரூ.3 லட்சமும் ஊதியமாக வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
 

click me!