அயர்லாந்துக்கு எதிரான தகுதிப்போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஜிம்பாப்வே அணி.
டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய 8 அணிகளும் நேரடியாக தகுதிபெற்ற அணிகள்.
எஞ்சிய 4 இடங்களுக்கு 8அணிகள் போட்டியிடுகின்றன. க்ரூப் ஏ-வில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளும், க்ரூப் பி-யில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, அயர்லாந்து அணிகளும் இடம்பெற்று போட்டியிட்டு வருகின்றன. இந்த 2 க்ரூப்களில் இருந்தும் தலா 2 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.
undefined
இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: பயிற்சி போட்டியில் பாகிஸ்தானை படுமோசமா தோற்கடித்த இங்கிலாந்து
இன்று நடந்த முதல் தகுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸை 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து க்ரூப் பி-யில் இடம்பெற்றுள்ள ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான தகுதிப்போட்டி ஹோபர்ட்டில் நடந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி, கேப்டன் சிக்கந்தர் ராசாவின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 174 ரன்களை குவித்தது. அதிரடியாக பேட்டிங் ஆடிய சிக்கந்தர் ராசா, 48 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 82 ரன்களை குவித்தார்.
இதையும் படிங்க - லாங் ஆனில் விராட் கோலியின் ஒன் ஹேண்ட் கேட்ச்சை பார்த்து மிரண்டுபோன ஆஸ்திரேலிய வீரர்கள்..! வைரல் வீடியோ
175 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய அயர்லாந்து அணியின் நட்சத்திர வீரர்களான பால் ஸ்டர்லிங் (0), பால்பிர்னி(3) ஆகிய இருவரும் ஏமாற்றமளிக்க, இளம் அதிரடி வீரரான ஹாரி டெக்டாரும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். முக்கியமான வீரர்கள் ஏமாற்றமளித்ததால் 20 ஓவரில் 143 ரன்கள் அடித்த அயர்லாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.