டி20 உலக கோப்பை: பயிற்சி போட்டியில் பாகிஸ்தானை படுமோசமா தோற்கடித்த இங்கிலாந்து

By karthikeyan VFirst Published Oct 17, 2022, 5:52 PM IST
Highlights

பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

டி20 உலக கோப்பை தகுதிப்போட்டிகள் நடந்துவருகின்றன. சூப்பர் 12 சுற்று போட்டிகள் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. நேரடியாக சூப்பர் 12 சுற்றில் ஆடும் 8 அணிகள் பயிற்சி போட்டிகளில் ஆடிவருகின்றன.

பிரிஸ்பேனில் இன்று முதலில் நடந்த பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதற்கடுத்து பிரிஸ்பேனில் நடந்த போட்டியில் இங்கிலாந்தும் பாகிஸ்தானும் மோதின.

இதையும் படிங்க - லாங் ஆனில் விராட் கோலியின் ஒன் ஹேண்ட் கேட்ச்சை பார்த்து மிரண்டுபோன ஆஸ்திரேலிய வீரர்கள்..! வைரல் வீடியோ

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டியில் ஒரு ஓவர் குறைக்கப்பட்டு 19 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 19 ஓவரில் 160 ரன்கள் அடித்தது. பாபர் அசாம், ரிஸ்வான் ஆகியோர் பேட்டிங் ஆடவில்லை. தொடக்க வீரராக ஆடிய ஷான் மசூத் 22 பந்தில் 39 ரன்கள் அடித்தார். ஹைதர் அலி(18), ஷதாப் கான்(14), இஃப்டிகார் அகமது (22) ஆகியோர் சிறிய பங்களிப்பு செய்தனர். பின்வரிசையில் முகமது வாசிம் 16 பந்தில் 26 ரன்கள் அடிக்க, 19 ஓவரில் 160 ரன்கள் அடித்தது.

இதையும் படிங்க - யாமிருக்க பயமேன்..? இந்திய அணியின் பிரச்னைக்கு தீர்வு கொடுத்து ஆடும் லெவனில் இடத்தை உறுதி செய்த ஷமி

161 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஃபிலிப் சால்ட்(1) மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ்(9) ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். அடித்து ஆடிய பென் ஸ்டோக்ஸ் 18 பந்தில் 36 ரன்கள் அடித்தார். ஹாரி ப்ரூக் 24 பந்தில் 45 ரன்களும், சாம் கரன் 14 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 33 ரன்களும் அடிக்க, 15வது ஓவரிலேயே 160 ரன்கள் என்ற இலக்கை அடித்து இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

click me!