லாங் ஆனில் விராட் கோலியின் ஒன் ஹேண்ட் கேட்ச்சை பார்த்து மிரண்டுபோன ஆஸ்திரேலிய வீரர்கள்..! வைரல் வீடியோ

By karthikeyan V  |  First Published Oct 17, 2022, 5:22 PM IST

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி போட்டியில் விராட் கோலி கடைசி ஓவரில் லாங் ஆனில் ஒற்றை கையில் பிடித்த அபாரமான கேட்ச்சின் வீடியோ வைரலாகிவருகிறது.
 


டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் வரும் 22ம் தேதி முதல் நடக்கின்றன. 23ம் தேதி மெல்பர்னில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அதற்கு முன்பாக பயிற்சி போட்டிகளில் ஆடிவருகிறது.

இன்று பிரிஸ்பேனில் நடந்த பயிற்சி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் (57) மற்றும் சூர்யகுமார் யாதவ்(50) ஆகிய இருவரின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 186 ரன்களை குவித்தது இந்திய அணி.

Latest Videos

undefined

இதையும் படிங்க - யாமிருக்க பயமேன்..? இந்திய அணியின் பிரச்னைக்கு தீர்வு கொடுத்து ஆடும் லெவனில் இடத்தை உறுதி செய்த ஷமி

187 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியாவை 180 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. பும்ரா ஆடாததால் இந்திய அணியின் பிரச்னையாக டெத் ஓவர்கள் பார்க்கப்பட்ட நிலையில், கடைசி ஓவரை வீசிய முகமது ஷமி, அந்த ஓவரில் 11 ரன்களை எதிர்நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய வீரர்களை வெறும் 4 ரன்கள் மட்டுமே அடிக்கவிட்டு, அந்த ஒரு ஓவரில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, டெத் ஓவர்களை அருமையாக வீசி முடித்துக்கொடுக்க நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையை இந்திய அணிக்கு அளித்தார்.

இதையும் படிங்க - ஐபிஎல் அணிகளுக்கு அதிரடி உத்தரவு.. தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட கெடு விதிப்பு

அந்த கடைசி ஓவரின் முதல் 2 பந்தில் 2 டபுள்ஸ் அடித்த கம்மின்ஸ், 3வது பந்தை லாங் ஆனில் தூக்கி அடிக்க, பவுண்டரி லைனில் நிற்காமல் லைனிலிருந்து கொஞ்சம் முன்பாக நின்ற விராட் கோலி, சிக்ஸருக்கு சென்ற பந்தை ஒற்றை கையில் பிடித்து மிரட்டினார். விராட் கோலியின் கேட்ச்சை அனைவருமே வியந்து பார்த்தனர். விராட் கோலி ஃபீல்டிங் செய்ததற்கு பின்னால் தான் வார்னர், ஃபின்ச், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகிய ஆஸ்திரேலிய வீரர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் விராட் கோலியின் கேட்ச்சை கண்டு மிரண்டனர். விராட்கோலியின் அந்த மிரட்டலான கேட்ச் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

click me!