டி20 உலக கோப்பையில் புறக்கணிக்கப்பட்டது குறித்து மௌனம் கலைத்த யுஸ்வேந்திர சாஹல்

By karthikeyan VFirst Published Dec 10, 2022, 8:13 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் தனக்கு ஆட வாய்ப்பளிக்கப்படாதது குறித்து ரிஸ்ட் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் பேசியுள்ளார்.
 

டி20 உலக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோற்று தொடரைவிட்டு வெளியேறியது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அரையிறுதியில் இந்திய அணி தோற்றவிதம் கடும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது.

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி 168 ரன்களை அடித்தது இந்திய அணி. 169 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்த முடியாததுதான் முக்கிய காரணமாக அமைந்தது. உலக கோப்பை தொடர் முழுக்க அஷ்வின் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறினார். அஷ்வின் - அக்ஸர் படேல் ஸ்பின் ஜோடியால் மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்தி கொடுக்க முடியவில்லை. அதுதான் பெரும் பின்னடைவாக அமைந்தது. அரையிறுதி போட்டியிலும் அது எதிரொலித்தது.

இந்தியா அபார பவுலிங்.. 34 ஓவரில் வங்கதேசத்தை 182 ரன்களுக்கு சுருட்டி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

இந்திய அணியின் பலமே ஸ்பின் பவுலிங் தான். ஆனால் இந்த உலக கோப்பையில் அதுவே பெரும் பின்னடைவாக அமைந்தது. அஷ்வின் விக்கெட் வீழ்த்தமுடியாமல் திணறியபோதிலும் யுஸ்வேந்திர சாஹலுக்கு ஆட வாய்ப்பளிக்காதது கடும் சர்ச்சைக்குள்ளானது. ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் மற்ற அணிகளின் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்பட்டபோதிலும், சாஹலுக்கு ஆடவாய்ப்பு வழங்கப்படவில்லை.

சாஹலை டி20 உலக கோப்பையில் ஆடவைக்காததை முன்னாள் வீரர்களும் பலரும் விமர்சித்தனர். ரசிகர்களுக்கும் இந்திய அணி நிர்வாகத்தின் அந்த முடிவு அதிருப்தியே அளித்தது.

இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஆட வாய்ப்பளிக்கப்படாதது குறித்து பேசிய யுஸ்வேந்திர சாஹல், கிரிக்கெட் தனி நபர் விளையாட்டல்ல. ஒவ்வொரு அணிக்கும் குறிப்பிட்ட அணி காம்பினேஷன் உள்ளது. அஷ்வினும் அக்ஸரும் சிறப்பாக பந்துவீசினார்கள். அணியில் ஆட வாய்ப்பு கிடைக்காததெல்லாம் சகஜம் தான். கேப்டன் ரோஹித்தும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் என்னிடம் முன்பே தெளிவுபடுத்திவிட்டனர். 

BAN vs IND: 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் ஷமிக்கு பதிலாக இணையும் ஃபாஸ்ட் பவுலர்..!

உலக கோப்பை என்றால், 2019 ஒருநாள் உலக கோப்பையில் தான் கடைசியாக ஆடினேன். அடுத்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பை நடக்கவுள்ளது. அணியில் எடுக்கப்படுவதும் எடுக்கப்படாததும் என் கையில் இல்லை. நான் எப்போதும் போல, நாட்டுக்காக ஆட கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக ஆடுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன் என்றார் சாஹல்.
 

click me!