BAN vs IND: 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் ஷமிக்கு பதிலாக இணையும் ஃபாஸ்ட் பவுலர்..!

By karthikeyan VFirst Published Dec 10, 2022, 5:46 PM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிரான  டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமிக்கு பதிலாக ஜெய்தேவ் உனாத்கத் சேர்க்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
 

இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று வங்கதேச அணி ஒருநாள் தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி 409 ரன்களை குவித்த இந்திய அணி, 410 ரன்கள் என்ற கடின இலக்கை வங்கதேசத்துக்கு நிர்ணயித்திருப்பதால் இந்த போட்டியில் இந்திய அணி ஜெயித்துவிடும்.

இதைத்தொடர்ந்து இந்தியா - வங்கதேசம் இடையே 2 டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டி வரும் 14ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிகள் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் என்பதால் ஃபைனலுக்கு முன்னேற, இந்த 2 டெஸ்ட்டிலும் வங்கதேசத்தை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்குகிறது.

ரோஹித், கங்குலி, கெய்ல் சாதனைகள் காலி.. இரட்டை சதம் விளாசி ஏகப்பட்ட சாதனைகளை வாரிக்குவித்த இஷான் கிஷன்

இந்நிலையில், டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ரோஹித் சர்மா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவரும் காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் ஆடமுடியாத சூழல் உள்ளது. 

கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு மாற்று வீரராக, வங்கதேச ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஏ அணியை கேப்டனாக இருந்து வழிநடத்திவரும் அபிமன்யூ ஈஸ்வரன் ஆடவுள்ளார். ரஞ்சி தொடரில் கடந்த சில ஆண்டுகளாக அபாரமாக ஆடி ரன்களை குவித்துவரும் வீரர் அபிமன்யூ.

ஃபாஸ்ட் பவுலர் முகமது ஷமிக்கு மாற்று வீரராக ஜெய்தேவ் உனாத்கத் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. 2010ம் ஆண்டு இந்திய அணிக்காக முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய ஜெய்தேவ் உனாத்கத், அதன்பின்னர் டெஸ்ட் அணியில் எடுக்கப்படவேயில்லை. அதன்பின்னர் இந்தியாவிற்காக 7 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். ஆனால் 2010க்கு பிறகு 12 ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறவேயில்லை.

ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடியுள்ள ஜெய்தேவ் உனாத்கத், ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே டிராபி ஆகிய உள்நாட்டு தொடர்களில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். 2019-2020 ரஞ்சி தொடரில் 67விக்கெட்டுகளை வீழ்த்தி, சௌராஷ்டிரா அணி முதல் முறையாக ரஞ்சி டிராபியை ஜெயிக்க காரணமாக இருந்தார். அண்மையில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே தொடரிலும் அபாரமாக பந்துவீசி 10 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி சௌராஷ்டிரா அணி விஜய் ஹசாரே டிராபியை ஜெயிக்க காரணமாக இருந்தார்.

ODI கிரிக்கெட்டில் முதல் சதத்தை இரட்டை சதமாக மாற்றி இஷான் கிஷன் வரலாற்று சாதனை! எலைட் லிஸ்ட்டில் இணைந்தார்

இந்நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்திய டெஸ்ட் அணியில் எடுக்கப்படவுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் அணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் வீரராக உனாத்கத் திகழ்கிறார். இதற்கு முன், இரு டெஸ்ட் போட்டிகளுக்கு இடையே அதிகமான இடைவெளி இருந்த வீரராக பார்த்திவ் படேல் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!