IPL 2023: இந்தியாவின் முதல் பவுலர்.. டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சாஹல்

By karthikeyan V  |  First Published Apr 2, 2023, 6:43 PM IST

டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார் யுஸ்வேந்திர சாஹல்.
 


ஐபிஎல் 16வது சீசனில் இன்று ஹைதராபாத்தில் நடந்துவரும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் புவனேஷ்வர் குமார் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் டாப் 3 வீரர்களான ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய மூவரும் அரைசதம் அடித்தனர். அதிரடியாக பேட்டிங் ஆடி 20 பந்தில் அரைசதம் அடித்த பட்லர் 22 பந்தில் 54 ரன்கள் அடித்தார். ஜெய்ஸ்வால் 37 பந்தில் 54 ரன்களும், சாம்சன் 32 பந்தில் 55 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 203 ரன்களை குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

Tap to resize

Latest Videos

IPL 2023: டெல்லி கேபிடள்ஸின் தோல்விக்கு இதுதான் காரணம்..! பிளேயர்ஸ் மீது ரிக்கி பாண்டிங் செம காட்டம்

204 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிவரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 52 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது. ஹாரி ப்ரூக்கை 13 ரன்களுக்கு வீழ்த்தினார் யுஸ்வேந்திர சாஹல். இது டி20 கிரிக்கெட்டில் சாஹலின் 300வது விக்கெட். 

சர்வதேச டி20, ஐபிஎல், உள்நாட்டு டி20 ஆகியவற்றில் சேர்த்து டி20 கிரிக்கெட்டில் மொத்தமாக 300 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் சாஹல். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 91 விக்கெட்டுகளையும், ஐபிஎல்லில் 168 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

ஐபிஎல்லில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற அமித் மிஸ்ராவின் (166) சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார். ஹாரி ப்ரூக் மற்றும் மயன்க் அகர்வாலின் விக்கெட்டுகளுடன் சேர்த்து மொத்தமாக ஐபிஎல்லில் 168 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  இதன்மூலம் ஐபிஎல்லில் அதிக விக்கெட் வீழ்த்திய ஸ்பின்னர் என்ற சாதனையை சாஹல் படைத்துள்ளார்.

IPL 2023: இந்த சீசனில் நான் ரொம்ப எதிர்பார்க்குற பிளேயர் அவர்தான்! வேற லெவல் சம்பவம் வெயிட்டிங் - ஹர்பஜன் சிங்

மேலும் டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய பவுலர் என்ற சாதனையையும் சாஹல் படைத்துள்ளார்.

click me!