ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி வருகிறார்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. 16ஆவது சீசனுக்காக ஐபிஎல் திருவிழா கடந்த 31 ஆம் தேதி தொடங்கியது. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், 2ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், 3ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் வெற்றி பெற்றன. இதைத் தொடர்ந்து தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 5ஆவது போட்டி நடந்து வருகிறது.
ஆர்சிபிக்குள்ள நடந்த பயிற்சி போட்டி; 55 பந்துகளில் சதம் விளாசிய மைக்கேல் பிரேஸ்வெல்!
இதில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் புவனேஷ்வர் குமார் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் ஆடியது. தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் யசஸ்வி ஜெய்ஷ்வால் இருவரும் சிறப்பாக விளையாடினர். இருவரும் 50 ரன்களுக்கு மேல் எடுத்தனர் பட்லர் 54 ரன்களிலும், ஜெய்ஷ்வால் 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த சாம்சன் 32 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில், 3 பவுண்டரிகள், 4 சிக்ஸ்ர்கள் அடங்கும்.
சாம்சன் இந்தப் போட்டியில் மட்டுமின்றி இதற்கு முன்னதாக நடந்த ஐபிஎல் சீசன்களிலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 10 போட்டிகளில் விளையாடி 541 ரன்கள் எடுத்துள்ளார்.
IPL 2023: கத்துக்குட்டி புவனேஷ்வர் குமார் தலைமையில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் வெற்றி வாகை சூடுமா?
இதுவதவிர கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 32 பந்துகளில் 74 ரன்களும், 2021 ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 63 பந்துகளில் 119 ரன்களும், 2022 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 27 பந்துகளில் 55 ரன்களும் எடுத்துள்ளார். இந்தப் போட்டியில் 55 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.