ENG vs IND: ஒருநாள் கிரிக்கெட்டில் டாப் இந்திய பவுலர்.. வரலாற்று சாதனை படைத்த சாஹல்

Published : Jul 15, 2022, 05:07 PM IST
ENG vs IND: ஒருநாள் கிரிக்கெட்டில் டாப் இந்திய பவுலர்.. வரலாற்று சாதனை படைத்த சாஹல்

சுருக்கம்

லண்டன் லார்ட்ஸில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை யுஸ்வேந்திர சாஹல் படைத்துள்ளார்.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டியில் இந்திய அணியை 100 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பழிதீர்த்தது இங்கிலாந்து அணி.

லண்டன் லார்ட்ஸில் நடந்த 2வது போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 246 ரன்கள் அடித்தது. இந்திய பவுலர்கள் நன்றாகத்தான் பந்துவீசினார்கள். இந்திய ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையும் படிங்க - ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பவுலிங்.. ரீஸ் டாப்ளி வரலாற்று சாதனை

246 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 146 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய யுஸ்வேந்திர சாஹல், பேர்ஸ்டோ (38), ஜோ ரூட் (11), பென் ஸ்டோக்ஸ் (21) மற்றும் மொயின் அலி (47) ஆகிய 4 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம், லண்டன் லார்ட்ஸில் ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை சாஹல் படைத்தார்.

இதையும் படிங்க - ஃபார்மில் இல்லாத கோலிக்கு ஆறுதல் மெசேஜ்..! இதயங்களை கொள்ளை கொண்ட பாபர் அசாமின் டுவீட்

இதற்கு 1983ல் மொஹிந்தர் அமர்நாத் லார்ட்ஸில் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தியதே லார்ட்ஸில் இந்திய பவுலரின் சிறப்பான பந்துவீச்சாக இருந்தது. அந்த சாதனையை முறியடித்து சாஹல் புதிய சாதனை படைத்துள்ளார். ஆஷிஷ் நெஹ்ரா 3/26, ஹர்பஜன் சிங் 3/28 ஆகியோரும் லார்ட்ஸில் 3 விக்கெட் வீழ்த்தியிருக்கின்றனர்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!