ENG vs IND: கோலியின் ஸ்கோரை மிக துல்லியமாக முன்கூட்டியே கணித்த ரசிகர்..! ஆச்சரியம்.. ஆனால் உண்மை

Published : Jul 15, 2022, 04:17 PM IST
ENG vs IND: கோலியின் ஸ்கோரை மிக துல்லியமாக முன்கூட்டியே கணித்த ரசிகர்..! ஆச்சரியம்.. ஆனால் உண்மை

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி எத்தனை பந்துகளில் எத்தனை ரன் அடிப்பார் என்று ரசிகர் ஒருவர் மிக துல்லியமாக கணித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்த நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

லண்டன் லார்ட்ஸில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 246 ரன்கள் அடிக்க, 247 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி வெறும் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 100 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதையும் படிங்க - ஃபார்மில் இல்லாத கோலிக்கு ஆறுதல் மெசேஜ்..! இதயங்களை கொள்ளை கொண்ட பாபர் அசாமின் டுவீட்

இந்திய பேட்ஸ்மேன்கள் படுமோசமாக பேட்டிங் ஆடினர். ரோஹித், தவான், கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா என அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி தோற்றது. ஒரு வீரராவது பெரிய இன்னிங்ஸ் ஆடியிருந்தால் வெற்றி வசப்பட்டிருக்கும்.

ஃபார்மில் இல்லாமல் இருக்கும் கோலி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அவரும் நேர்த்தியான ஷாட்டுகளை ஆடி நம்பிக்கையளித்தார். ஆனால் 25 பந்தில் 16 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். 

இதையும் படிங்க - ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பவுலிங்.. ரீஸ் டாப்ளி வரலாற்று சாதனை

கோலி 25 பந்தில் 16 ரன்கள் தான் அடிப்பார் என்று ரசிகர் ஒருவர் முன்கூட்டியே மிக துல்லியமாக கணித்து டுவீட் செய்திருந்தார். அதேபோலவே கோலி 25 பந்தில் 16 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அந்த ரசிகரின் டுவீட் செம வைரலாகிவருகிறது.

அந்த ரசிகர் இரவு 10 மணிக்கு இந்த டுவீட் செய்துள்ளார். அதன்பின்னர் அரை மணி நேரத்திற்கு பிறகு தான் கோலி ஆட்டமிழந்தார். ரசிகர் மிக துல்லியமாக கோலியின் ஸ்கோரை கணித்த சம்பவம் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. இதேமாதிரியான ஒரு சம்பவம் ஏற்கனவேவும் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: வெறும் 5 ஓவரில் ஜப்பானை ஊதித்தள்ளிய இந்திய மகளிர் அணி.. செமி பைனலுக்கு என்ட்ரி!
Abhishek Sharma: ஆத்தாடி! என்னா அடி! சிக்சர் மழை.. வெறும் 30 பந்தில் சதம்.. அபிஷேக் சர்மா உலக சாதனை!