ஓபனிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கன்பார்ம்: சுப்மன் கில்லிற்கு 3ஆவது இடம்: பேட்டிங் ஆர்டரில் மாற்றம்!

Published : Jul 12, 2023, 09:40 AM IST
ஓபனிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கன்பார்ம்: சுப்மன் கில்லிற்கு 3ஆவது இடம்: பேட்டிங் ஆர்டரில் மாற்றம்!

சுருக்கம்

இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறங்குவது உறுதி என்று கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலமாக 2025 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை இந்திய அணி தொடங்கியுள்ளது. இதே போன்று வெஸ்ட் இண்டீஸ் அணியும் தனது முதல் ஹோம் டெஸ்ட் தொடரை தொடங்குகிறது.

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு டொமினிகா மைதானத்தில் நடக்கிறது.

தாய்லாந்தில் 2023 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: அதிகாரப்பூர்வ சின்னமாக ஹனுமன் அறிவிப்பு!
 

இந்திய டெஸ்ட் அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), அஜின்க்யா ரஹானே (துணை கேப்டன்), கே எஸ் பரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெயதேவ் உனத்கட், நவ்தீப் சைனி.

வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் அணி:

கிரேக் பிராத்வைட் (கேப்டன்), ஜெர்மைன் பிளாக்வுட் (துணை கேப்டன்), அலிக் அதானாஸ், டேகனரைன் சந்தர்பால், ரஹ்கீம் கார்ன்வால், ஜோசுவா டா சில்வா, ஷானன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், கிர்க் மெக்கன்சிஃப், கெமர் ரோச், ஜோமெல் வாரிக்கன், ரேமன் ரைஃபர்

ட்ரீம் 11 ஜெர்சியுடன் டாப் பேட்ஸ்மேன்கள்: வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்!

இந்தியா 13 ஆவது முறையாக வெஸ்ட் இண்டீஸ் சென்று டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில், இந்தியா 5 முறையும், வெஸ்ட் இண்டீஸ் 7 முறையும் வென்றுள்ளன. இந்த நிலையில், இந்திய அணியில் டெஸ்ட் தொடரில் இடம் பெற்ற யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரில், இன்றைய போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் தொடரின் மூலமாக இந்திய அணியில் அறிமுகமாகிறார்.

மேலும், அவர் தான் ஓபனிங் இறங்குவார் என்று கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். இதுவரையில் இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால், இந்த டெஸ்ட் தொடரில் முதல் முறையாக இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ரோகித் சர்மா உடன் இணைந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக விளையாட உள்ளார்.

லண்டனில் காஃபி கப்புடன் உலா வரும் அனுஷ்கா சர்மா; வீடியோ எடுக்கும் விராட் கோலி!

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று சிறப்பாக விளையாடினார். இவ்வளவு ஏன், அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதும் வென்றுள்ளார். இதன் காரணமாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலிற்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது.

இவரைத் தொடர்ந்து நம்பர் 3ல் சுப்மன் கில் விளையாட விரும்புவதாக ரோகித் சர்மா கூறியிருக்கிறார். பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் கலந்துரையாடிய பிறகு இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் இந்த மாற்றங்கள் சொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தால் தொடக்க வீரராக யார் இறங்குவது என்று தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ராஜாவாக இருந்த ருதுராஜ் கெய்வாட்டிற்கு இந்த டெஸ்ட் தொடரில் பிளேயிங் 11ல் வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!