இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உடல் எடையை 5 கிலோ வரையில் குறைத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி அடைந்தது. இதையடுத்து கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் வரையில் இந்திய வீரர்கள் ஓய்வில் இருந்தனர். இந்த நிலையில், இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
லண்டனில் காஃபி கப்புடன் உலா வரும் அனுஷ்கா சர்மா; வீடியோ எடுக்கும் விராட் கோலி!
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு டொமினிகாவில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி தற்போது தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களாக ஓய்வில் இருந்த ரோகித் சர்மா மனைவி, குழந்தையோடு நேரத்தை செலவிட்டதோடு, கடுமையான உடற்பயிற்சியையும் மேற்கொண்டிருக்கிறார்.
இந்தியாவை வீழ்த்தும் நேரம் வந்து விட்டது – பிரையன் லாரா நம்பிக்கை!
இதன் காரணமாக ஃபேட்டாக இருந்த ரோகித் சர்மா உடல் எடையை 5 கிலோ வரையில் குறைத்துள்ளார். தொடர்ந்து சொதப்பி வந்த ரோகித் சர்மாவுக்கு இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, கடந்த 2019 அம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதற்கு ரோகித் சர்மா முக்கிய காரணமாக இருந்தார். அந்த தொடரில் மட்டும் அவர் 5 சதங்கள் அடித்திருந்தார்.
தற்போது உடல் எடையை குறைத்த நிலையில், தன்னை உலகக் கோப்பை தொடருக்காக ரோகித் சர்மா தயாரிப்படுத்திக் கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
WTC 2023-25: எல்லோ கோட்டையும் அழித்து, மறுபடியும் இந்தியா – ஆஸ்திரேலியாவா? இனிமேல் தான் தெரியும்!