ட்ரீம் 11 ஜெர்சியுடன் டாப் பேட்ஸ்மேன்கள்: வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்!

Published : Jul 11, 2023, 06:15 PM IST
ட்ரீம் 11 ஜெர்சியுடன் டாப் பேட்ஸ்மேன்கள்: வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்!

சுருக்கம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ட்ரீம் 11 கொண்ட புதிய ஜெர்சியுடன் களமிறங்க உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்கியது. அதில் அடிடாஸ் நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சிக்கு ஸ்பான்ஸர் செய்தது. இதையடுத்து, இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்ஸராக இருந்த பைஜூஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் வரும் நவம்பர் மாதம் வரையில் இருந்தது.

5 கிலோ உடல் எடையை குறைத்த கேப்டன் ரோகித் சர்மா: வைரலாகும் புகைப்படம்!

ஆனால், வருமானம் பாதிப்பு காரணமாக ஒப்பந்தத்தை மார்ச் மாதத்துடன் முடித்துக் கொண்டது. இதையடுத்து கடந்த ஜூன் 7 ஆம் தேதி நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஜெர்சியில் ஸ்பான்ஸர் லோகோ இல்லாமல் களமிறங்கியது. மாறாக அணியின் புதிய கிட் ஸ்பான்ஸராக அடிடாஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.

லண்டனில் காஃபி கப்புடன் உலா வரும் அனுஷ்கா சர்மா; வீடியோ எடுக்கும் விராட் கோலி!

இந்த ஒப்பந்தம் ஜூன் மாதம் முதல் தொடங்கியது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா அடிடாஸ் நிறுவனத்தின் புதிய ஜெர்சியுடன் களமிறங்கியது. இந்த நிலையில் தான் பைஜூஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் மார்ச் மாதம் முடிந்த நிலையில், ஸ்பான்சருக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டது. இதனை ஃபேண்டஸி கேமிங் ஆப் செயலி நிறுவனமான டிரீம் லெவன் நிறுவனம் கைப்பற்றியது. வரும் 2027 ஆம் ஆண்டு வரையில் ட்ரீம் 11 நிறுவனம் இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்ஸராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவை வீழ்த்தும் நேரம் வந்து விட்டது – பிரையன் லாரா நம்பிக்கை!

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை டொமினிகாவில் நடக்கிறது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2025 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இந்த டெஸ்ட் தொடர் மூலமாக தொடங்குகிறது.

WTC 2023-25: எல்லோ கோட்டையும் அழித்து, மறுபடியும் இந்தியா – ஆஸ்திரேலியாவா? இனிமேல் தான் தெரியும்!

 

நாளை தொடங்கும் டெஸ்ட் போட்டியில் இந்தியா ட்ரீம் 11 ஜெர்சியுடன் களமிறங்க உள்ளது. இதையடுத்து ரோகித் சர்மா, விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் அஜிங்கியா ரஹானே ஆகியோர் ட்ரீம் 11 ஜெர்சி அணிந்து போட்டோ ஷூட் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?