ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் டி20 பேட்டிங் தரவரிசை பட்டியலில் 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடரை தொடர்ந்து சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில், முதல் 2 போட்டிகளில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம் பெறவில்லை. எஞ்சிய 3 போட்டிகளில் இடம் பெற்று விளையாடினார். மூன்று போட்டிகளில் விளையாடி 36, 93 மற்றும் 12 ரன்கள் என்று மொத்தமாக 141 ரன்கள் குவித்துள்ளார். இந்த தொடரில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணியானது எஞ்சிய 4 போட்டிகளில் வரிசையாக வெற்றி பெற்று 4-1 என்று தொடரை கைப்பற்றியது.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா பங்கேற்க வாய்ப்பு!
ஜிம்பாப்வே தொடரைத் தொடர்ந்து இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. வரும் 27 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரையில் இந்த தொடர் நடைபெறுகிறது.
மகளிர் ஆசிய கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் – 19ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகிறது!
இந்த நிலையில் தான் ஜிம்பாப்வே தொடரில் சிறப்பாக விளையாடியதைத் தொடர்ந்து டி20 பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் 10ஆவது இடத்திலிருந்து 4 இடங்கள் முன்னேறி 6ஆவது இடத்திற்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் முன்னேறியுள்ளார். இந்திய அணியின் மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து 2ஆவது இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியா அதிரடி மன்னன் டிராவிஸ் ஹெட் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
2026 டி20 உலகக் கோப்பை வரை இந்தியாவின் புதிய கேபடன் சூர்யகுமார் யாதவ்? ஹர்திக் பாண்டியாவின் நிலை?