இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இலங்கை தொடரில் பங்கேற்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2ஆவது முறையாக டி20 உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றிய புதிய சாதனை படைத்தது. இதையடுத்து விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட்டிலிருந்து அடுத்தடுத்து ஓய்வு பெற்றனர். டி20 உலகக் கோப்பை தொடரைத் தொடர்ந்து சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.
மகளிர் ஆசிய கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் – 19ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகிறது!
இதில், முதல் போட்டியில் தோல்வி அடைந்து எஞ்சிய 4 போட்டிகளில் வெற்றி பெற்று 4-1 என்று தொடரை கைப்பற்றியது. ஜிம்பாப்வே தொடரைத் தொடர்ந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.
இதில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான கவுதம் காம்பீர் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் இலங்கை தொடரில் இடம் பெற்று விளையாட வேண்டும் என்று கூறியிருந்தார்.
2026 டி20 உலகக் கோப்பை வரை இந்தியாவின் புதிய கேபடன் சூர்யகுமார் யாதவ்? ஹர்திக் பாண்டியாவின் நிலை?
இந்த நிலையில் தான் ரோகித் சர்மா இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்று விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விராட் கோலி மற்றும் பும்ரா தொடர்ந்து ஓய்வில் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. ரோகித் சர்மா இலங்கை தொடரில் இடம் பெற்று விளையாடினால் கேஎல் ராகுலுக்கு கேப்டன் பொறுப்பு கிடைக்காது. எனினும் கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்ப வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ரோகித் சர்மா இடம் பெற்றால் அவர் தான் கேப்டனாக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.