மகளிருக்கான ஆசிய கோப்பை 2024 கிரிக்கெட் தொடரின் 9ஆவது சீசன் வரும் 19 ஆம் தேதி தொடங்குகிறது.
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் ஒருநாள் தொடராக நடத்தப்பட்ட ஆசிய கோப்பை தற்போது டி20 வடிவில் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் நடைபெற்ற 8 சீசன்களில் இந்தியா 7 முறை டிராபி வென்றுள்ளது. ஒருமுறை வங்கதேச அணி டிராபியை கைப்பற்றியது. இந்த நிலையில் தான் மகளிருக்கான ஆசிய கோப்பை 2024 கிரிக்கெட் தொடரின் 9ஆவது சீசன் வரும் 19 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகிறது.
2026 டி20 உலகக் கோப்பை வரை இந்தியாவின் புதிய கேபடன் சூர்யகுமார் யாதவ்? ஹர்திக் பாண்டியாவின் நிலை?
undefined
இந்த தொடரில் வங்கதேச மகளிர் அணி, இந்தியா மகளிர் அணி, மலேசியா மகளிர் அணி, நேபாள் மகளிர் அணி, பாகிஸ்தான் மகளிர், இலங்கை மகளிர், தாய்லாந்து மகளிர் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் என்று மொத்தமாக 8 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. இந்த 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து குரூப் சுற்று போட்டிகளில் மோதும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் 2 அணிகள் இறுதிப் போட்டிக்கு செல்லும். இந்த தொடர் வரும் 19 ஆம் தேதி இலங்கையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் நேபாள் மற்றும் ஐக்கிய அரபு அணிகள் மோதுகின்றன. 2ஆவது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி 19 ஆம் தேதி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
Paris Olympic Games 2024: பாரீஸ் 2024 ஒலிம்பிக் பதக்கங்களின் விலை, எடை எவ்வளவு தெரியுமா?
இந்த தொடரானது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதே போன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் லைவ் ஸ்டீரீமிங் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.