WPL 2023: அலைஸா ஹீலி, மெக்ராத் அபார அரைசதம்..! மும்பை இந்தியன்ஸுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது யுபி வாரியர்ஸ்

Published : Mar 12, 2023, 09:16 PM IST
WPL 2023: அலைஸா ஹீலி, மெக்ராத் அபார அரைசதம்..! மும்பை இந்தியன்ஸுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது யுபி வாரியர்ஸ்

சுருக்கம்

மகளிர் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய யுபி வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 159 ரன்கள் அடித்து, 160 ரன்கள் என்ற சவாலான இலக்கை மும்பை இந்தியன்ஸுக்கு நிர்ணயித்துள்ளது. 

மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்துவரும் போட்டியில் யுபி வாரியர்ஸும் மும்பை இந்தியன்ஸும் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

யுபி வாரியர்ஸ் அணி:

தேவிகா வைத்யா, அலைஸா ஹீலி (கேப்டன்), ஷ்வேதா செராவத், கிரன் நவ்கிரே, டாலியா மெக்ராத், தீப்தி ஷர்மா, சிம்ரன் ஷேக், சோஃபி எக்லிஸ்டோன், ஷப்னிம் இஸ்மாயில், அஞ்சலி சர்வானி, ராஜேஷ்வர் கெய்க்வாட். 

IND vs AUS: இரட்டை சதத்தை தவறவிட்ட விராட் கோலி.! முதல் இன்னிங்ஸில் இந்தியா 91 ரன்கள் முன்னிலை

மும்பை இந்தியன்ஸ் அணி:

யஸ்டிகா பாட்டியா, ஹைலி மேத்யூஸ், நாட் ஸ்கிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), தாரா குஜார், அமெலியா கெர், இசி வாங், அமன்ஜோத் கௌர், ஹுமைரா காஸி, ஜிந்தாமணி கலிதா, சாய்கா இஷாக்.
 
முதலில் பேட்டிங் ஆடிய யுபி வாரியர்ஸ் அணியின் தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான அலைஸா ஹீலி அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 46 பந்தில் அலைஸா ஹீலி 58 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் டாலியா மெக்ராத் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, பொறுப்புடனும் அதேவேளையில் அடித்தும் ஆடிய மெக்ராத் 37 பந்தில் 50 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 159 ரன்கள் அடித்தது.

விராட் கோலி வாரிக்குவித்த சாதனைகளின் பட்டியல்.! லெஜண்ட்ஸ் லிஸ்ட்டில் சாதனை நாயகன் கோலி

160 ரன்கள் என்ற சவாலான இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி விரட்டிவருகிறது.
 

PREV
click me!

Recommended Stories

Virat Kohli: ஜஸ்ட் 1 ரன்னில் சச்சினின் சாதனையுடன் போட்டிப்போடும் கோலி
காதலியை கரம் பிடிக்கும் ஷிகர் தவான்.. 2வது திருமணம்.. யார் இந்த சோஃபி ஷைன்?