PSL 2023: இஸ்லாமாபாத் அணியை வீழ்த்தி பெஷாவர் ஸால்மி வெற்றி..! தகுதிச்சுற்று போட்டி விவரம்

Published : Mar 12, 2023, 08:03 PM IST
PSL 2023: இஸ்லாமாபாத் அணியை வீழ்த்தி பெஷாவர் ஸால்மி வெற்றி..! தகுதிச்சுற்று போட்டி விவரம்

சுருக்கம்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெஷாவர் ஸால்மி அணி வெற்றி பெற்றது. தகுதிச்சுற்று போட்டி விவரத்தை பார்ப்போம்.  

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை நோக்கி நகரும் நிலையில், இன்று ராவல்பிண்டியில் நடந்த போட்டியில் பெஷாவர் ஸால்மி மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இஸ்லாமாபாத் யுனைடெட் அணி:

ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், காலின் முன்ரோ, ஹசன் நவாஸ், சொஹைப் மக்சூத், ஷதாப் கான் (கேப்டன்), ஆசிஃப் அலி, ஃபஹீம் அஷ்ரஃப், முகமது வாசிம், ஹசன் அலி, ஃபஸல்ஹக் ஃபரூக்கி. 

பெஷாவர் ஸால்மி அணி:

சயிம் அயுப், முகமது ஹாரிஸ், டாம் கோலர் காட்மோர் (கேப்டன்), ஹசீபுல்லா கான் (விக்கெட் கீப்பர்), பானுகா ராஜபக்சா, ஜேம்ஸ் நீஷம், ஆமீர் ஜமால், முஜீபுர் ரஹ்மான், குராம் ஷேசாத், சல்மான் இர்ஷாத், சுஃபியான் முகீம்.

IND vs AUS: இரட்டை சதத்தை தவறவிட்ட விராட் கோலி.! முதல் இன்னிங்ஸில் இந்தியா 91 ரன்கள் முன்னிலை

முதலில் பேட்டிங் ஆடிய பெஷாவர் ஸால்மி அணியின் தொடக்க வீரர் சயிம் அயுப் டக் அவுட்டானார். ஆனால் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த மற்றொரு தொடக்க வீரரான முகமது ஹாரிஸ் 39 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 79 ரன்களை குவித்தார். ராஜபக்சா 25 பந்தில் 41 ரன்கள் அடித்தார். பின்வரிசை வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் பெஷாவர் ஸால்மி அணி 20 ஓவரில் 179 ரன்கள் அடித்தது. 

இந்த சீசனில் 240 ரன்களையே எளிதாக சில அணிகள் விரட்டிய நிலையில், 180 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணியில் எந்த வீரரும் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் 19.4 ஓவரில் அந்த அணி 166 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 13 ரன்கள் வித்தியாசத்தில் பெஷாவர் ஸால்மி அணி வெற்றி பெற்றது.

விராட் கோலி வாரிக்குவித்த சாதனைகளின் பட்டியல்.! லெஜண்ட்ஸ் லிஸ்ட்டில் சாதனை நாயகன் கோலி

இன்றுடன் லீக் சுற்று முடியும் நிலையில் 15ம் தேதி முதல் தகுதிச்சுற்று போட்டிகள் தொடங்குகின்றன. முதல் தகுதிச்சுற்று போட்டியில் லாகூர் காலண்டர்ஸ் - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் ஜெயிக்கும் அணி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறும். இந்த போட்டியில் தோற்கும் அணி, இஸ்லாமாபாத் - பெஷாவர் அணிகளுக்கு இடையேயான முதல் எலிமினேட்டரில் ஜெயிக்கும் அணியை 2வது எலிமினேட்டரில் எதிர்கொள்ளும். 2வது எலிமினேட்டரில் ஜெயிக்கும் அணி ஃபைனலுக்கு முன்னேறும்.
 

PREV
click me!

Recommended Stories

சுப்மன் கில்லை உடனே தூக்குங்க! கம்பீருக்கு எதிராக ரசிகர்கள் கொந்தளிப்பு! சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு!
IND vs SA 2nd T20: சுப்மன் கில், சூர்யகுமார் படுமோசம்..! இந்தியாவை ஊதித்தள்ளிய தென்னாப்பிரிக்கா!