BAN vs ENG: 2வது டி20யிலும் சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி டி20 தொடரை வென்றது வங்கதேசம்

Published : Mar 12, 2023, 07:08 PM IST
BAN vs ENG: 2வது டி20யிலும் சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி டி20 தொடரை வென்றது வங்கதேசம்

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 2-0 என டி20 தொடரை வென்றது.  

இங்கிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 2-1 என வென்றது. அதைத்தொடர்ந்து டி20 போட்டிகள் நடந்துவருகின்றன. முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகித்த நிலையில், 2வது டி20 போட்டி தாக்காவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

வங்கதேச அணி: 

லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), ரோனி தாலுக்தர், நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, டௌஹிட் ரிடாய், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), அஃபிஃப் ஹுசைன், மெஹிடி ஹசன், டஸ்கின் அகமது, நசும் அகமது, முஸ்தாஃபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத்.

IND vs AUS: இரட்டை சதத்தை தவறவிட்ட விராட் கோலி.! முதல் இன்னிங்ஸில் இந்தியா 91 ரன்கள் முன்னிலை

இங்கிலாந்து அணி:

ஃபிலிப் சால்ட், டேவிட் மலான், ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), பென் டக்கெட், மொயின் அலி, சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், ரெஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர்.

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் இந்த போட்டியிலும் சோபிக்கவில்லை. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் மளமளவென அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர் ஃபிலிப் சால்ட் 25 ரன்கள் அடித்தார். பென் டக்கெட் 28  ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து வீரர்களுமே அதைவிட மோசமாக ஆட்டமிழக்க, அந்த அணி 20 ஓவரில் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச  அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய மெஹிடி ஹசன் மிராஸ் அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார்.  

விராட் கோலி வாரிக்குவித்த சாதனைகளின் பட்டியல்.! லெஜண்ட்ஸ் லிஸ்ட்டில் சாதனை நாயகன் கோலி

118 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய வங்கதேச அணி வீரர்கள் ஒருமுனையில் சீரான இடைவெளியில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் பேட்டிங் ஆடிய நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ 46 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். 19வது ஓவரில் இலக்கை அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 2-0 என டி20 தொடரை வென்றது.
 

PREV
click me!

Recommended Stories

Grok AI Prediction: ஐபிஎல் 2026 கோப்பையை வெல்லும் அணி இதுதான்! க்ரோக் AI அதிர்ச்சி கணிப்பு!
Vaibhav Suryavanshi: ஆத்தாடி! 15 வயதில் இத்தனை கோடிகள் சொத்தா? சொத்து மதிப்பிலும் சிக்சர் அடிக்கும் வைபவ் சூர்யவன்ஷி!