BAN vs ENG: 2வது டி20யிலும் இங்கி., படுமோசமான பேட்டிங்.. மெஹிடி ஹசனின் சுழலில் சொற்ப ரன்களுக்கு சுருண்டது

Published : Mar 12, 2023, 04:17 PM IST
BAN vs ENG: 2வது டி20யிலும் இங்கி., படுமோசமான பேட்டிங்.. மெஹிடி ஹசனின் சுழலில் சொற்ப ரன்களுக்கு சுருண்டது

சுருக்கம்

2வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை வெறும் 117 ரன்களுக்கு சுருட்டிய வங்கதேச அணி 118 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டுகிறது.   

இங்கிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 2-1 என வென்றது. அதைத்தொடர்ந்து டி20 போட்டிகள் நடந்துவருகின்றன. முதல் டி20 போட்டியில் வங்கதேசம் அணி வெற்றி பெற்றது.

2வது டி20 போட்டி தாக்காவில் இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

விராட் கோலி வாரிக்குவித்த சாதனைகளின் பட்டியல்.! லெஜண்ட்ஸ் லிஸ்ட்டில் சாதனை நாயகன் கோலி

வங்கதேச அணி: 

லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), ரோனி தாலுக்தர், நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, டௌஹிட் ரிடாய், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), அஃபிஃப் ஹுசைன், மெஹிடி ஹசன், டஸ்கின் அகமது, நசும் அகமது, முஸ்தாஃபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத்.

இங்கிலாந்து அணி:

ஃபிலிப் சால்ட், டேவிட் மலான், ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), பென் டக்கெட், மொயின் அலி, சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், ரெஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர்.

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் இந்த போட்டியிலும் சோபிக்கவில்லை. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் மளமளவென அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். தொடக்க வீரர் ஃபிலிப் சால்ட் 25 ரன்கள் அடித்தார். பென் டக்கெட் 28  ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து வீரர்களுமே அதைவிட மோசமாக ஆட்டமிழக்க, அந்த அணி 20 ஓவரில் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

2வது டெஸ்ட்டிலும் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா

வங்கதேச  அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய மெஹிடி ஹசன் மிராஸ் அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார். வெறும் 118 ரன்கள் என்ற எளிய இலக்கை வங்கதேச அணி விரட்டுகிறது.
 

PREV
click me!

Recommended Stories

Ind Vs Pak டி20 உலகக் கோப்பை: வெறும் ரூ.100க்கு விற்கப்படும் டிக்கெட்டுகள்.. நீங்க வாங்கீட்டீங்களா.?
சுப்மன் கில்லை உடனே தூக்குங்க! கம்பீருக்கு எதிராக ரசிகர்கள் கொந்தளிப்பு! சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு!