ரஸ்க் சாப்பிட வேண்டிய பந்தில் ரிஸ்க் எடுத்து அவுட்டான ஜடேஜா - சதத்தை நோக்கி விராட் கோலி!

By Rsiva kumarFirst Published Mar 12, 2023, 11:43 AM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 4ஆம் நாள் உணவு இடைவேளையின் போது இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 480 ரன்கள் குவித்துள்ளது. இதில், உஸ்மான் கவாஜா 180 ரன்களும், கேமரூன் க்ரீன் 114 ரன்களும் எடுத்தனர். இதன் மூலமாக ஆஸ்திரேலியா நல்ல ஸ்கோர் எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஷ்வின் படைத்துள்ளார்.

41 வயதில் பாடிபில்டிங் சாம்பியன்: தைராய்டுக்காக ஜிம்மிற்கு சென்ற 2 மகன்களின் தாயாருக்கு கிடைத்த பரிசு!

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். 2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 36 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து இருவரும் 3ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஸ்டார்க் ஓவரில் பவுண்டரியும், சிக்சரும் விளாசிய ரோகித் சர்மா இன்றைய போட்டியில் 21 ரன்கள் எடுத்திருந்த போது சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆயிரம் ரன்கள் எடுத்த சாதனயாளர்களின் பட்டியலில் 7ஆவது இடம் பிடித்தார்.

கோலி 7 வருசத்துல செஞ்சத ரோகித் சர்மா ஒரே நாள்ல செஞ்சிட்டாரு!

இறுதியாக எளிதாக சிக்சர் அடிக்க வேண்டிய பந்தில் குன்னெமன் ஓவரில் மார்னஸ் லபுஷேனிடம் கேட்ச் கொடுத்து விரக்தியாக வெளியேறினார். இவரைத் தொடர்ந்து நங்கூரம் போன்று நின்று விளையாடிய புஜாரா 42 ரன்னில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து விராட் கோலி களமிறங்கினார்.  அவரும் நிதானமாக ஆட வேண்டும் என்ற மைண்ட் செட்டில் வந்து ஒவ்வொரு ரன்னாக எடுத்து ஆடினார். ஒரு கட்டத்தில் 5ஆவது சதமடித்து சாதனை படைத்த சுப்மன் கில் 128 ரன்களில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து ஜடேஜா களமிறங்கினார். நிதானமாக ரன் சேர்த்த கோலி கடைசியாக 14 மாதங்களுக்குப் பிறகு தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

பவுண்டரி அடித்து சாதனையாளர்களின் பட்டியலில் இடம் பிடித்த ரோகித் சர்மா!

3ஆள்  நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்தது. கோலி 59 ரன்னுடனும், ஜடேஜா 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து இருவரும் 4ஆம் ஆட்டத்தை தொடங்கினர். இதில் ஜடேஜா அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 28 ரன்களில் வெளியேறினார். ரஸ்க் சாப்பிட வேண்டிய பந்தில் ரிஸ்க் எடுத்து தேவையில்லாமல் எளிதாக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் களமிறங்கினார். இருவரும் நிதானமாக ஆடி வருகின்றனனர்.

உணவு இடைவேளை வரையில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் எடுத்துள்ளது. இதில், விராட் கோலி 88 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். பரத் 25 ரன்கள் எடுத்துள்ளார். இந்தப் போட்டி டிராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

விக்கெட்டே விழ கூடாது; ஆஸ்திரேலிய பவுலர்களை வெறுப்பேத்த வேண்டும் - அஜித் அகர்கர் அறிவுரை!

click me!