WPL 2023: ஷஃபாலி வெர்மா காட்டடி பேட்டிங்..! வெறும் ஏழே ஓவரில் இலக்கை அடித்து டெல்லி கேபிடள்ஸ் அணி அபார வெற்றி

Published : Mar 11, 2023, 10:30 PM IST
WPL 2023: ஷஃபாலி வெர்மா காட்டடி பேட்டிங்..! வெறும் ஏழே ஓவரில் இலக்கை அடித்து டெல்லி கேபிடள்ஸ் அணி அபார வெற்றி

சுருக்கம்

மகளிர் பிரீமியர் லீக்கில் குஜராத் ஜெயிண்ட்ஸை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேபிடள்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.  

மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. டெல்லி கேபிடள்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை டி.ஒய் பாட்டீல் ஸ்ட்டேடியத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி:

சபினேனி மேகனா, லாரா வோல்வார்ட், ஹர்லீன் தியோல், ஆஷ்லே கார்ட்னெர், ஜார்ஜியா வேர்ஹாம், சுஷ்மா வெர்மா (விக்கெட் கீப்பர்), தயாலன் ஹேமலதா, ஸ்னே ராணா (கேப்டன்), கிம்  கர்த், மன்சி ஜோஷி, தனுஜா கன்வார்.

IND vs AUS: ஷுப்மன் கில் அபார சதம்.. விராட் கோலி அரைசதம்..! பெரிய ஸ்கோரை நோக்கி இந்தியா

டெல்லி கேபிடள்ஸ் அணி:

மெக் லானிங் (கேப்டன்), ஷஃபாலி வெர்மா, லாரா ஹாரிஸ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், மேரிஸன் கேப், ஜெஸ் ஜோனாசென், டானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), மின்னு ராணி, ராதா யாதவ், ஷிகா பாண்டே, டாரா நோரிஸ்.

முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி வீராங்கனைகள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்வரிசையில் ஆடிய கிம் கர்த் மட்டுமே 32 ரன்கள் அடித்து பங்களிப்பு செய்தார். மற்ற அனைவருமே மிகச்சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதனால் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி 20 ஓவரில் 105 ரன்கள் மட்டுமே அடித்தது. டெல்லி கேபிடள்ஸ் அணியில் அபாரமாக பந்துவீசிய மேரிஸன் கேப் அதிகபட்சமாக 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா என்ற இருபெரும் லெஜண்ட் கிரிக்கெட்டர்களின் சாதனைகளை தகர்த்தார் விராட் கோலி

106 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை  விரட்டிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வெர்மா அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். காட்டடி அடித்து 28 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 76 ரன்களை குவிக்க, 7.1 ஓவரில் இலக்கை அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடள்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!