WPL 2023: குஜராத் ஜெயிண்ட்ஸை வெறும் 105 ரன்களுக்கு சுருட்டியது டெல்லி கேபிடள்ஸ்

Published : Mar 11, 2023, 09:26 PM IST
WPL 2023: குஜராத் ஜெயிண்ட்ஸை வெறும் 105 ரன்களுக்கு சுருட்டியது டெல்லி கேபிடள்ஸ்

சுருக்கம்

மகளிர் பிரீமியர் லீக்கில் டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி 20 ஓவரில் வெறும் 105 ரன்கள் மட்டுமே அடித்து 106 ரன்கள் என்ற எளிய இலக்கை டெல்லி கேபிடள்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.  

மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. டெல்லி கேபிடள்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையே இன்று மும்பை டி.ஒய் பாட்டீல் ஸ்ட்டேடியத்தில் நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி:

சபினேனி மேகனா, லாரா வோல்வார்ட், ஹர்லீன் தியோல், ஆஷ்லே கார்ட்னெர், ஜார்ஜியா வேர்ஹாம், சுஷ்மா வெர்மா (விக்கெட் கீப்பர்), தயாலன் ஹேமலதா, ஸ்னே ராணா (கேப்டன்), கிம்  கர்த், மன்சி ஜோஷி, தனுஜா கன்வார்.

சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா என்ற இருபெரும் லெஜண்ட் கிரிக்கெட்டர்களின் சாதனைகளை தகர்த்தார் விராட் கோலி

டெல்லி கேபிடள்ஸ் அணி:

மெக் லானிங் (கேப்டன்), ஷஃபாலி வெர்மா, லாரா ஹாரிஸ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், மேரிஸன் கேப், ஜெஸ் ஜோனாசென், டானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), மின்னு ராணி, ராதா யாதவ், ஷிகா பாண்டே, டாரா நோரிஸ்.

முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி வீராங்கனைகள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்வரிசையில் ஆடிய கிம் கர்த் மட்டுமே 32 ரன்கள் அடித்து பங்களிப்பு செய்தார். மற்ற அனைவருமே மிகச்சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதனால் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி 20 ஓவரில் 105 ரன்கள் மட்டுமே அடித்தது.

IND vs AUS: ஷுப்மன் கில் அபார சதம்.. விராட் கோலி அரைசதம்..! பெரிய ஸ்கோரை நோக்கி இந்தியா

டெல்லி கேபிடள்ஸ் அணியில் அபாரமாக பந்துவீசிய மேரிஸன் கேப் அதிகபட்சமாக 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் முச்சல் திருமணம் ரத்து..! அதிகாரப்பூர்வமாக அறிவித்த மந்தனா..! இதுதான் காரணம்!