WPL 2023: நாக் அவுட் போட்டியில் நாட் ஸ்கிவர் பிரண்ட் அதிரடி அரைசதம்! UPW-க்கு கடின இலக்கை நிர்ணயித்த MIW

By karthikeyan VFirst Published Mar 24, 2023, 9:22 PM IST
Highlights

மகளிர் பிரீமியர் லீக் எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, நாட் ஸ்கிவர் பிரண்ட்டின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 182 ரன்களை குவித்து, 183  ரன்கள் என்ற கடின இலக்கை யுபி வாரியர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

மகளிர் பிரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. டெல்லி கேபிடள்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறிவிட்டது.

புள்ளி பட்டியலில் 2 மற்றும் 3ம் இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் இன்று நடந்துவரும் எலிமினேட்டர் போட்டியில் ஆடிவருகின்றன. மும்பை டி.ஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

யுபி வாரியர்ஸ் அணி:

அலைஸா ஹீலி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷ்வேதா செராவத், சிம்ரன் ஷேக், டாலியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், கிரன் நவ்கிரே, தீப்தி ஷர்மா, சோஃபி எக்லிஸ்டோன், அஞ்சலி சர்வானி, பார்ஷவி சோப்ரா, யஷஸ்ரி.

IPL 2023: இந்த முறை கோப்பையை தூக்கியே தீரணும்..! ஆர்சிபி அணியின் வலுவான ஆடும் காம்பினேஷன்

மும்பை இந்தியன்ஸ் அணி:

ஹைலி மேத்யூஸ், யஸ்டிகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), நாட் ஸ்கிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), மெலி கெர், பூஜா வஸ்ட்ராகர், இசி வாங், அமன்ஜோத் கௌர், ஹுமைரா காஸி, ஜிந்தாமனி கலிடா, சாய்கா இஷாக்.

முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகள் யஸ்டிகா பாட்டியா 21 ரன்களும், ஹைலி மேத்யூஸ் 26 ரன்களும் அடித்தனர். 3ம் வரிசையில் இறங்கிய நாட் ஸ்கிவர் பிரண்ட் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி நிலைத்து நின்று தனி வீராங்கனையாக மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்கோரை உயர்த்திய நாட் ஸ்கிவர் பிரண்ட் 38 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 72 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று இன்னிங்ஸை முடித்து கொடுத்தார்.

IPL 2023: சிஎஸ்கே அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்..! 4 வெளிநாட்டு வீரர்களுமே மேட்ச் வின்னர்கள்

மெலி கெர் 19 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 29 ரன்களை விளாசினார். நாட் ஸ்கிவர் பிரண்ட்டின் அதிரடி அரைசதம் மற்றும் மெலி கெர்ரின் அதிரடி ஃபினிஷிங்கால் 20 ஓவரில் 182 ரன்களை குவித்து, எலிமினேட்டர் போட்டியில் 183 ரன்கள் என்ற கடின இலக்கை யுபி வாரியர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!