IPL 2023: சிஎஸ்கே அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்..! 4 வெளிநாட்டு வீரர்களுமே மேட்ச் வின்னர்கள்

By karthikeyan VFirst Published Mar 24, 2023, 8:50 PM IST
Highlights

ஐபிஎல் 16வது சீசனில் களமிறங்கும் சிஎஸ்கே அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.
 

ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 16வது சீசன் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனுக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.

4 முறை ஐபிஎல் கோப்பையை வென்று ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக திகழ்கிறது சிஎஸ்கே அணி. அதற்கு முக்கியமான காரணம் தோனி. கொரோனா காரணமாக கடந்த 3 சீசன்கள் வெளிநாட்டிலும், இந்தியாவில் ஒருசில நகரங்களில் மட்டுமே நடத்தப்பட்டதால் சென்னையில் எந்த போட்டியும் நடக்கவில்லை.

இந்நிலையில், தனது கடைசி ஐபிஎல் போட்டியை சென்னையில் ஆடிவிட்டுத்தான் ஓய்வுபெறுவேன் என்று தோனி ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த சீசனில் சென்னையில் போட்டி நடக்கிறது. எனவே தோனிக்கு இதுவே கடைசி சீசனாக பார்க்கப்படுகிறது. அதனால் தனது கடைசி சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்பில் தோனியும், அவருக்காக 5வது முறையாக கோப்பையை வென்று கொடுத்து வெற்றியுடன் அனுப்பிவைக்கும் முனைப்பில் சிஎஸ்கே அணியும் உள்ளன.

IPL 2023: இந்த முறை கோப்பையை தூக்கியே தீரணும்..! ஆர்சிபி அணியின் வலுவான ஆடும் காம்பினேஷன்

அதற்கேற்ப மிகச்சிறந்த வீரர்களை கொண்டவலுவான அணி அமைந்துள்ளது. இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது சிஎஸ்கே. அந்தவகையில், இந்த சீசனில் களமிறங்கும் சிஎஸ்கே அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம். 

ருதுராஜ் கெய்க்வாட்டுடன் நியூசிலாந்து அதிரடி வீரர் டெவான் கான்வே ஓபனிங் செய்வார்.  3ம் வரிசையில் அம்பாதி ராயுடு ஆடுவார். 4ம் வரிசையில் சீனியர் வீரரான அஜிங்க்யா ரஹானே ஆடுவார். அவர் அந்த இடத்தில் நிலைத்தன்மையை கொடுப்பார். அதன்பின்னர் இங்கிலாந்து ஆல்ரவுண்டர்களான மொயின் அலி மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் ஆடுவார்கள். விக்கெட் கீப்பர் - கேப்டன் தோனி. 

தோனிக்கு முன்பாகவே ரவீந்திர ஜடேஜா இறக்கப்படுவார். ஜடேஜா தான் ஃபினிஷர் ரோலை செய்வார். ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் தீபக் சாஹருடன் மற்றொரு ஃபாஸ்ட் பவுலராக முகேஷ் சௌத்ரி ஆடுவார். ஜடேஜா மற்றும் மொயின் அலி ஆகிய 2 ஸ்பின் ஆல்ரவுண்டர்கள் கண்டிப்பாக ஆடும் நிலையில், மற்றொரு ஸ்பின்னராக இலங்கை ஸ்பின்னர் மஹீஷ் தீக்‌ஷனா ஆடுவார்.

நீங்க சீனியர்.. எனக்கு கீழ் பணிபுரிவது நல்லா இருக்காது! சீனியர் ஸ்பின்னரின் சேவையை ஏற்க மறுத்த ராகுல் டிராவிட்

சிஎஸ்கே அணியில் ஆடும் 4 வெளிநாட்டு வீரர்களான டெவான் கான்வே, மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ் மற்றும் மஹீஷ் தீக்‌ஷனா ஆகிய நால்வருமே மேட்ச் வின்னர்கள் தான். எனவே இந்த சீசனில் சிஎஸ்கே அணி நல்ல பேட்ஸ்மேன்கள், தரமான ஆல்ரவுண்டர்கள் என சிறந்த ஆடும் லெவன் காம்பினேஷனுடன் ஆடுகிறது. 

சிஎஸ்கே அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்:

டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பாதி ராயுடு, அஜிங்க்யா ரஹானே, மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், முகேஷ் சௌத்ரி, மஹீஷ் தீக்‌ஷனா.

click me!