IPL 2023: இந்த முறை கோப்பையை தூக்கியே தீரணும்..! ஆர்சிபி அணியின் வலுவான ஆடும் காம்பினேஷன்

By karthikeyan V  |  First Published Mar 24, 2023, 6:29 PM IST

ஐபிஎல் 16வது சீசனில் களமிறங்கும் ஆர்சிபி அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.
 


ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், 16வது சீசன் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. விராட் கோலி என்ற தலைசிறந்த வீரரை அணியில் பெற்றிருந்தும் அந்த அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. 

ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, ஜாக் காலிஸ், டிவில்லியர்ஸ், கெய்ல் என பல தலைசிறந்த வீரர்களை அணியில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெற்றிருந்தும் கூட ஆர்சிபி அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றிராதது அந்த அணிக்கு பெரிய வருத்தம் தான்.

Tap to resize

Latest Videos

ஒவ்வொரு சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கி கடைசியில் ஏமாற்றத்துடன் சீசனை முடிப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளது ஆர்சிபி அணி. கடந்த சீசனுக்கு முன்பாக விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகியதால், ஃபாஃப் டுப்ளெசிஸின் தலைமையில் கடந்த சீசனில் ஆடிய ஆர்சிபி அணி, இந்த சீசனிலும் அவரது கேப்டன்சியிலேயே ஆடுகிறது.

சூர்யகுமார் யாதவுக்கு மோசமான சூழலில் முக்கியமான அட்வைஸ் கொடுத்த கவாஸ்கர்

இந்த சீசனிலும் வழக்கம்போலவே முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் ஆர்சிபி அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.

கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். ரஜத் பட்டிதார் 3ம் வரிசையிலும், க்ளென் மேக்ஸ்வெல் 4ம் வரிசையிலும் பேட்டிங் ஆடுவார்கள். உள்நாட்டு அதிரடி வீரரான மஹிபால் லோம்ரார் 5ம் வரிசையில் பேட்டிங் ஆடுவார். இதற்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ் இடம்பெற்றிருந்த மஹிபால் லோம்ரார் அவரது அதிரடியான பேட்டிங்கால் கவனம் ஈர்த்தவர். உள்நாட்டு கிரிக்கெட்டிலும் சிறந்த பங்களிப்பை செய்துவரும் வீரர் அவர். 

விக்கெட் கீப்பர் - ஃபினிஷராக தினேஷ் கார்த்திக் ஆடுவார். ஸ்பின்னர்களாக பேட்டிங்கும் ஆடத்தெரிந்த ஆல்ரவுண்டர்களான ஷபாஸ் அகமது மற்றும் ஹசரங்கா ஆகிய இருவரும் ஆடுவார்கள். இவர்களுடன் மேக்ஸ்வெல்லும் ஸ்பின் பவுலிங் வீசுவார். ஃபாஸ்ட் பவுலர்களாக ஹர்ஷல் படேல், முகமது சிராஜ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய மூவரும் ஆடுவார்கள்.

நீங்க சீனியர்.. எனக்கு கீழ் பணிபுரிவது நல்லா இருக்காது! சீனியர் ஸ்பின்னரின் சேவையை ஏற்க மறுத்த ராகுல் டிராவிட்

ஆர்சிபி அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்:

ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் பட்டிதார், க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரார், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.
 

click me!