WPL 2023: முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜெயிண்ட்ஸ் பலப்பரீட்சை! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Mar 4, 2023, 12:55 PM IST
Highlights

மகளிர் பிரீமியர் லீக் முதல் சீசன் இன்று தொடங்கும் நிலையில், முதல் போட்டியில் மோதும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் தொடரில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், 16வது சீசன் வரும் 31ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், மகளிர் பிரீமியர் லீக் தொடர் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. முதல் சீசன் இன்று தொடங்கும் நிலையில், முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் குஜராத் ஜெயிண்ட்ஸும் மோதுகின்றன.

இன்று தொடங்கி, வரும் 26ம் தேதி வரை மகளிர் பிரீமியர் லீக் தொடர் நடக்கிறது. மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் ஆடுகின்றன. மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியம் மற்றும் பிரபோர்ன் ஸ்டேடியம் ஆகிய 2 ஸ்டேடியங்களில் போட்டிகள் நடக்கின்றன. 

ஸ்பின்னர்கள் வீசிய நோ பாலால் இந்திய அணி அடைந்த டாப் 3 தோல்விகள்

இன்று நடக்கும் முதல் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயிண்ட்ஸ் ஆகிய 2 அணிகளும் மோதுகின்றன. இன்றிரவு 7.30 மணிக்கு மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் மோதும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் ஆகிய 2 அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி கடுமையாக இருக்கு. இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியின் உத்தேச ஆடும் லெவன்:

யஸ்டிகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஹைலீ மேத்யூஸ், நாட் ஸ்கிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), தாரா குஜ்ஜர், அமெலியா கெர், பூஜா வஸ்ட்ராகர், அமன்ஜோத் கௌர், ஜிந்தாமனி கலிதா, இசி வாங், சோனம் யாதவ்/சைகா இஷாக்.

IND vs AUS: ஆட்டத்தையே தலைகீழாக திருப்பிய அந்த ஒற்றை பந்து.! அதுதான் இந்தியாவின் தோல்விக்கு காரணம் - கவாஸ்கர்

உத்தேச குஜராத் ஜெயிண்ட்ஸ் மகளிர் அணி:

பெத் மூனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), சபினேனி மேகனா, ஹர்லீன் தியோல், ஆஷ்லே கார்ட்னெர், ஹேமலதா, கில் கார்த், அன்னாபெல் சதர்லேண்ட், ஸ்னே ராணா, ஹர்லி காலா/அஷ்வனி குமாரி, மன்சி ஜோஷி/மோனிகா படேல், தனுஜா கன்வார்.
 

click me!