PSL 2023: அசாம் கானின் அதிரடி பேட்டிங்கால் கடின இலக்கை அடித்து இஸ்லாமாபாத் அணி வெற்றி! புள்ளி பட்டியல் அப்டேட்

Published : Mar 04, 2023, 09:07 AM IST
PSL 2023: அசாம் கானின் அதிரடி பேட்டிங்கால் கடின இலக்கை அடித்து இஸ்லாமாபாத் அணி வெற்றி! புள்ளி பட்டியல் அப்டேட்

சுருக்கம்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் நிர்ணயித்த 202 ரன்கள் என்ற இலக்கை, அசாம் கானின் அதிரடியான பேட்டிங்கால் அடித்து இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கராச்சி கிங்ஸ் - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகளுக்கு இடையேயான போட்டி ராவல்பிண்டியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

கராச்சி கிங்ஸ் அணி:

மேத்யூ வேட், ஆடம்  ரோஸிங்டன் (விக்கெட் கீப்பர்), ஷர்ஜீல் கான், டயாப் தாஹிர், ஷோயப் மாலிக், இர்ஃபான் கான், இமாத் வாசிம் (கேப்டன்), ஆமீர் யாமின், முகமது ஆமீர், ஆண்ட்ரூ டை, டப்ரைஸ் ஷம்ஸி.

இந்தூர் பிட்ச் படுமட்டம்.. ஐசிசி அதிரடி அறிவிப்பு

இஸ்லாமாபாத் யுனைடெட் அணி:

காலின் முன்ரோ, அலெக்ஸ் ஹேல்ஸ், வாண்டர்டசன், ஷதாப் கான் (கேப்டன்), அசாம் கான் (விக்கெட் கீப்பர்), ஆசிஃப் அலி, ஃபஹீம் அஷ்ரஃப், டாம் கரன், ஹசன் அலி, முபாசிர் கான், ருமான் ரயீஸ்.

முதலில் பேட்டிங் ஆடிய கராச்சி கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷர்ஜீல் கான் (8), ரோஸிங்டன் (20) ஆகிய இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, டயாப் தாஹிர் (19), ஷோயப் மாலிக்(12) ஆகியோரும் சொதப்பினர். அதன்பின்னர் அபாரமாக பேட்டிங் ஆடிய கேப்டன் இமாத் வாசிம் அரைசதம் அடித்து சதத்தை நோக்கி சென்றார். 54 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 92 ரன்களை குவித்தார். இமாத் வாசிம் கடைசி வரை களத்தில் நின்று பேட்டிங் ஆடினாலும் அவரால் சதம் அடிக்க முடியவில்லை. 20 ஓவரில் 201 ரன்களை குவித்தது கராச்சி கிங்ஸ் அணி.

202 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் தொடக்க வீரர் காலின் முன்ரோ 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க வீரரான அலெக்ஸ் ஹேல்ஸ் அடித்து ஆடி 16 பந்தில் 34 ரன்களை விளாசினார். வாண்டர்டசன் 20 பந்தில் 22 ரன்கள் மட்டுமே அடித்தார். ஃபஹீம் அஷ்ரஃப் 32 பந்தில் 41 ரன்கள் அடித்தார். 5ம் வரிசையில் இறங்கிய அசாம் கான், வழக்கம்போலவே அடித்து ஆடி அரைசதம் அடித்தார். கராச்சி கிங்ஸ் பவுலிங்கை அடித்து நொறுக்கிய அசாம் கான், 41 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 72 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று இலக்கை அடித்து போட்டியை முடித்து கொடுத்தார். அவரது அதிரடியான அரைசதத்தால் 19.2 ஓவரில் இலக்கை அடித்து இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ICC WTC: இந்தியாவை வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா..! இந்திய அணிக்கு சிக்கல்

இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் லாகூர் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தலா 6 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் கராச்சி கிங்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் முறையே 2 மற்றும் 3ம் இடங்களில் உள்ளன. 6 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் பெஷாவர் ஸால்மி அணி 3ம் இடத்தில் உள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!