இந்தூர் பிட்ச் படுமட்டம்.. ஐசிசி அதிரடி அறிவிப்பு

Published : Mar 03, 2023, 08:57 PM IST
இந்தூர் பிட்ச் படுமட்டம்.. ஐசிசி அதிரடி அறிவிப்பு

சுருக்கம்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நடந்த இந்தூர் பிட்ச் படுமோசமானது என ஐசிசி அறிவித்துள்ளது.  

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட  தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகித்த நிலையில், இந்தூரில் நடந்த 3வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய ஆடுகளங்கள் இயல்பாகவே ஸ்பின்னிற்குத்தான் சாதகமாக இருக்கும். அது தெரிந்து அதற்கான தயாரிப்புகளுடன் இந்தியாவிற்கு வந்திருந்தாலும், முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் படுதோல்விகளை சந்தித்த ஆஸ்திரேலிய அணி, வாழ்வா சாவா என்ற 3வது டெஸ்ட்டில் அபாரமாக ஆடியது.

ICC WTC: இந்தியாவை வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா..! இந்திய அணிக்கு சிக்கல்

இந்தூர் ஆடுகளத்தில் முதல் ஓவரிலிருந்தே பந்து திரும்பியது. அதை பயன்படுத்தி இந்திய வீரர்களை சொற்ப ரன்களுக்கு வீழ்த்தி 109 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது ஆஸ்திரேலிய அணி. இந்திய அணியை சொற்ப ரன்களுக்கு சுருட்டியது மட்டுமல்லாது, இந்திய ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொண்டனர் ஆஸ்திரேலிய வீரர்கள். குறிப்பாக முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிய உஸ்மான் கவாஜா அரைசதம் அடித்தார். 88 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியை நேதன் லயன் அபாரமாக பந்துவீசி 8 விக்கெட் வீழ்த்தி 163 ரன்களுக்கு சுருட்டினார். 76 ரன்கள் என்ற இலக்கை எளிதாக அடித்து ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியாவின் பலமான ஸ்பின்னிற்கு சாதகமாக இந்திய அணி ஆடுகளங்களை தயார் செய்ததாக ஆஸ்திரேலிய ஊடகங்களும், முன்னாள் வீரர்களும் இந்திய ஆடுகளங்களை விமர்சித்தனர். ஆனால் முதல் 2 போட்டிகளில் சொதப்பிய ஆஸ்திரேலிய அணி, இந்தூர் டெஸ்ட்டில் சுதாரிப்புடன் ஆடி இந்திய அணியை வீழ்த்தியது. 

இந்தூர் ஆடுகளத்தில் முதல் ஓவரிலிருந்தே பந்து திரும்பியது. எது இந்திய அணியின் பலம் என்று கருதப்பட்டதோ, அதையே பலவீனமாக்கி ஆஸ்திரேலிய அணி வென்றது. வெறும் 2 நாள் மற்றும் ஒரு மணி நேரத்தில் ஆட்டமே முடிந்துவிட்டது. இந்த பிட்ச் கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், அதை ஆய்வு செய்த ஐசிசி, இந்தூர் பிட்ச் படுமோசமானது என்று ரிப்போர்ட் செய்துள்ளது.

புஜாராவை அவுட்டாக்கியது நேதன் லயன் இல்ல; ரோஹித் சர்மா தான்..! இந்தியா தோற்றால் நீங்கதான் காரணம் ரோஹித்

இந்திய ஆடுகளம் கடைசியாக 2017ம் ஆண்டு மோசம் என்று ரேட் செய்யப்பட்டது. 2017ல் புனே ஆடுகளம் படுமோசம் என்று ஐசிசி தெரிவித்தது. அதன்பின்னர் 6 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது இந்தூர் ஆடுகளம் மோசமானது என்று ஐசிசி ரேட் செய்துள்ளது. முதல் 2 டெஸ்ட் போட்டிகள் நடந்த நாக்பூர் மற்றும் டெல்லி ஆடுகளங்களும் சராசரியான பிட்ச்கள் என்றே ஐசிசி தெரிவித்திருந்தது.
 

PREV
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?