WPL 2023: லாரா, கார்ட்னெர் அதிரடி பேட்டிங்.. ஆர்சிபிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி

By karthikeyan VFirst Published Mar 18, 2023, 9:42 PM IST
Highlights

மகளிர் பிரீமியர் லீக்கில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி 20 ஓவரில் 188 ரன்களை குவித்து, 189 ரன்கள் என்ற கடின இலக்கை ஆர்சிபிக்கு நிர்ணயித்தது.
 

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஆர்சிபி - குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி:

சோஃபி டன்க்லி, லாரா வோல்வார்ட், ஹர்லீன் தியோல், ஆஷ்லே கார்ட்னெர், தயாளன் ஹேமலதா, சபினேனி மேகனா, சுஷ்மா வெர்மா (விக்கெட் கீப்பர்), கிம் கார்த், ஸ்னே ராணா (கேப்டன்), டனுஜா கன்வார், அஷ்வனி குமாரி. 

NZ vs SL: 2வது டெஸ்ட்டில் வில்லியம்சன், நிகோல்ஸ் இரட்டை சதம்..! மெகா ஸ்கோர் அடித்து நியூசிலாந்து டிக்ளேர்

ஆர்சிபி அணி:

சோஃபி டிவைன், ஸ்மிரிதி மந்தனா (கேப்டன்), எலைஸ் பெர்ரி, ஹீதர் நைட், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), கனிகா அஹுஜா, ஷ்ரேயங்கா பாட்டீல், திஷா கசட், மேகன் ஸ்கட், ஆஷா சோபனா, பிரீத்தி போஸ்.

முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீராங்கனை டன்க்லி 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீராங்கனையான லாரா வோல்வார்ட் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 42 பந்தில் லாரா 68 ரன்கள் அடித்தார். சபினேனி மேகனா 31 ரன்கள் அடித்தார்.

கோலி மாதிரி எத்தனை பேர் வந்தாலும் சச்சின் டெண்டுல்கரை நெருங்கக்கூட முடியாது..! சக்லைன் முஷ்டாக் கருத்து

ஆஷ்லே கார்ட்னெர் 26 பந்தில் 41 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். பின்வரிசையில் ஹேமலதா 6 பந்தில் 16 ரன்களும், ஹர்லீன் தியோல் 5 பந்தில் 12 ரன்களும் அடிக்க, 188 ரன்களை குவித்து 189 ரன்கள் என்ற கடின இலக்கை ஆர்சிபிக்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!