WPL 2023: பலமான டெல்லி கேபிடள்ஸ் - பலவீனமான குஜராத் ஜெயிண்ட்ஸ் பலப்பரீட்சை..! டாஸ் ரிப்போர்ட்

By karthikeyan VFirst Published Mar 16, 2023, 7:14 PM IST
Highlights

மகளிர் பிரீமியர் லீக்கில் குஜராத் ஜெயிண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. 
 

மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் சீசனான இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி ஆடிய அனைத்து போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. டெல்லி கேபிடள்ஸ் அணி 5 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது.

யுபி வாரியர்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், ஆர்சிபி ஆகிய 3 அணிகளும் சரியாக ஆடாமல் புள்ளி பட்டியலில் கடைசி 3 இடங்களில் உள்ளன. யுபி  வாரியர்ஸ் அணி 2 வெற்றிகளையும், ஆர்சிபி மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகள் தலா ஒரு வெற்றியையும் பெற்றுள்ளன.

கவாஸ்கர் சொன்னது தவறு.. ராகுல்லாம் வேலைக்கு ஆகமாட்டார்.. ICC WTC ஃபைனலில் அந்த பையன் தான் ஆடுவான்- சபா கரிம்

இன்றைய போட்டியில் வலுவான டெல்லி கேபிடள்ஸ் அணியை புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

மெக் லானிங் (கேப்டன்), ஷஃபாலி வெர்மா, அலைஸ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மேரிஸன் கேப், ஜெஸ் ஜோனாசென், டானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), அருந்ததி ரெட்டி, ராதா யாதவ், ஷிகா பாண்டே, பூனம் யாதவ்.

சச்சின் பயங்கரமான மூளைக்காரர்.. அவரை ஸ்லெட்ஜிங் செய்தது எனக்கே எதிராக திரும்பியது.! சக்லைன் முஷ்டாக் வருத்தம்

குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி:

சோஃபியா டன்க்லி, லாரா வோல்வார்ட், ஹர்லீன் தியோல், ஆஷ்லே கார்ட்னெர், தயாளன் ஹேமலதா, ஸ்னே ராணா (கேப்டன்), சுஷ்மா வெர்மா (விக்கெட் கீப்பர்), கிம் கர்த், டனுஜா கன்வார், மன்ஸி ஜோஷி, அஷ்வனி குமாரி.
 

click me!