
மகளிர் பிரீமியர் லீக் முதல் சீசனுக்கான ஏலம் மும்பையில் நடந்தது. இந்த ஏலத்தில் அதிகபட்சமாக ரூ.3.4 கோடிக்கு இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா விலைபோனார். அவரை அதிகபட்ச தொகை கொடுத்து ஆர்சிபி அணி ஏலத்தில் எடுத்தது.
ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்ட்னெர் மற்றும் இங்கிலாந்து வீராங்கனை நாட் ஸ்கைவர் பிரண்ட் ஆகிய இருவரும் தலா ரூ.3.2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இவர்கள் எல்லாம் அதிக தொகைக்கு விலைபோன நிலையில், சில பெரிய வீராங்கனைகள் ஏலத்தில் விலைபோகவேயில்லை. அப்படி ஏலத்தில் விலைபோகாத டாப் 5 வீராங்கனைகளை பார்ப்போம்.
IND vs AUS: முதல் டெஸ்ட்டுக்கு முன்பே கணித்த பாண்டிங்.. கண்டுக்காம தோல்வியை தழுவிய ஆஸ்திரேலியா
1. சுஸி பேட்ஸ் (நியூசிலாந்து) - அடிப்படை விலை ரூ.30 லட்சம்
சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை (3683) குவித்த வீராங்கனை இவர் தான். நியூசிலாந்து ஆல்ரவுண்டரான இவரை அடிப்படை விலைக்கு எடுக்கக்கூட எந்த அணியும் முன்வரவில்லை.
2. அலானா கிங் (ஆஸ்திரேலியா) - அடிப்படை விலை ரூ.40 லட்சம்
ஆஸ்திரேலிய வீராங்கனை அலானா கிங்கை அடிப்படை விலையான ரூ.40 லட்சத்துக்கூட எந்த அணியும் எடுக்கவில்லை.
3. சாமரி அத்தப்பத்து (இலங்கை) - அடிப்படை விலை ரூ.30 லட்சம்
இலங்கையை சேர்ந்த பவர் ஹிட்டரான அத்தப்பத்து, ஆஃப் ஸ்பின் பவுலிங்கும் வீசக்கூடிய ஆல்ரவுண்டர். ஆனாலும் இவர் மீது எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை.
4. லாரா வோல்வார்ட் (தென்னாப்பிரிக்கா) - அடிப்படை விலை ரூ.30 லட்சம்
தென்னாப்பிரிக்கா டாப் ஆர்டர் வீராங்கனையான லாராவையும் எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
WPL 2023 Auction: அதிகமான தொகைக்கு விலைபோன டாப் 10 வீராங்கனைகள்
5. டேனி வியாட் (இங்கிலாந்து) - அடிப்படை விலை ரூ.50 லட்சம்
இங்கிலாந்து ஆல்ரவுண்டரான டேனி வியாட் டி20 கிரிக்கெட்டில் 2 சதங்கள் விளாசிய வீராங்கனை. ஆனாலும் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.