உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா எப்படி தகுதி பெற்றது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் 7 ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இந்தப் போட்டியின் மூலமாக தொடர்ந்து இந்தியா 2ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
பதிரனாவை உட்கார வச்சதற்கு பலன் கிடைச்சிருச்சு: இலங்கை 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
முதல் முறையாக 2021-2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா முதல் முறையாக தகுதி பெறுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த முதல் உல்க டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், இந்தியா நியூசிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற ஹீனா மல்லிக், பாரத்ப்ரீத் சிங்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக் போட்டிகளில் நடந்த 6 தொடர்களில் இந்தியா 10 வெற்றி, 5 தோல்விகளை சந்தித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தியாவில் நடந்த அனைத்து டெஸ்ட் தொடர்களையும் வென்ற இந்திய அணி வெளிநாட்டில் நடந்த தொடரில் ஒரு தோல்வியும், 1 டிராவையும் சந்தித்தது. இங்கிலாந்து தொடரை இந்தியா 2-1 என்று முன்னிலை பெற்றது. எனினும், அந்த தொடரை வெல்ல முடியவில்லை. தென் ஆப்பிரிக்காவில் இந்தியா 1-0 என்று முன்னிலையில் இருந்தும் கடைசியாக 1-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
எதுவுமே செய்யாமல் புதிய சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸ்!
இந்திய அணியில் கேப்டன்களின் மாற்றத்தால் பல சர்ச்சனைகள் நிகழ்ந்தது. விராட் கோலிக்குப் பிறகு ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்றார் ரோகித் சர்மா விளையாடாத போட்டிகளில் கேஎல் ராகுல் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தினார். இதே போன்று பும்ராவும் கேப்டனாக இருந்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் காலகட்டத்தில் இந்தியா 18 போட்டிகளில் விளையாடியது, இதில் அதிக முறை கேப்டனாக இருந்தவர்கள்
16 வைடு எதிரொலி: ஓரங்கட்டப்பட்ட மதீஷா பதிரனா: இலங்கை 323 ரன்கள் குவிப்பு!
விராட் கோலி – 7
ரோகித் சர்மா -6
கேஎல் ராகுல் – 3
அஜிங்க்யா ரஹானே – 1
ஜஸ்ப்ரித் பும்ரா - 1
WTC இறுதிப் போட்டி – இந்தியா கடந்து வந்த பாதை:
இங்கிலாந்து தொடர்:
ஆகஸ்ட் 04, 2021 - இந்தியா vs இங்கிலாந்து முதல் டெஸ்ட் - டிரா
ஆகஸ்ட் 12, 2021 - இந்தியா vs இங்கிலாந்து 2வது டெஸ்ட் - வெற்றி
ஆகஸ்ட் 25, 2021 - இந்தியா vs இங்கிலாந்து 3வது டெஸ்ட் - தோல்வி
செப்டம்பர் 02, 2021 - இந்தியா vs இங்கிலாந்து 4வது டெஸ்ட் - வெற்றி
நியூசிலாந்து தொடர்:
நவம்பர் 25, 2021 - இந்தியா vs நியூசிலாந்து 1வது டெஸ்ட் டிரா
டிசம்பர் 03, 2021- இந்தியா vs நியூசிலாந்து 2வது டெஸ்ட் - வெற்றி
தென் ஆப்பிரிக்கா தொடர்:
டிசம்பர் 26, 2021- இந்தியா vs தென் ஆப்பிரிக்கா 1வது டெஸ்ட் - வெற்றி
ஜனவரி 3, 2022 - இந்தியா vs தென் ஆப்பிரிக்கா 2வது டெஸ்ட் – தோல்வி
ஜனவரி 11, 2022 - இந்தியா vs தென் ஆப்பிரிக்கா 3வது டெஸ்ட் – தோல்வி
இலங்கை தொடர்:
மார்ச் 4, 2022 - இந்தியா vs இலங்கை முதல் டெஸ்ட் - இந்தியா வெற்றி
மார்ச் 12, 2022 - இந்தியா vs இலங்கை 2வது டெஸ்ட் - இந்தியா வெற்றி
இங்கிலாந்து கடைசி டெஸ்ட்:
ஜூலை 1, 2022 - இந்தியா vs இங்கிலாந்து 5வது டெஸ்ட் - தோல்வி
வங்கதேசம் தொடர்:
டிசம்பர் 14, 2022 - இந்தியா vs வங்கதேசம் முதல் டெஸ்ட் - இந்தியா வெற்றி
டிசம்பர் 22, 2022 - இந்தியா vs வங்கதேசம் 2வது டெஸ்ட் - இந்தியா வெற்றி
பார்டர் கவாஸ்கர் டிராபி:
பிப்ரவரி 9, 2023 - இந்தியா vs ஆஸ்திரேலியா முதல்டெஸ்ட் – இந்தியா வெற்றி
பிப்ரவரி 17, 2023 - இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் - இந்தியா வெற்றி
மார்ச் 1, 2023 - இந்தியா vs ஆஸ்திரேலியா 3வது டெஸ்ட் - தோல்வி
மார்ச் 9, 2023 - இந்தியா vs ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட் - டிரா