அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதோடு, அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எதுவும் செய்யாமல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அயர்லாந்து ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடியது. அயர்லாந்து அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய அயர்லாந்து அணி ஸ்டூவர்ட் பிராட் வேகத்தில் சிக்கி சின்னாபின்னமானது. இதில், அயர்லாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.
எனக்கு இப்போ சிராஜ், ஷமி தான் பிரச்சனை – டேவிட் வார்னர் ஓபன் டாக்!
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியில் டக்கெட் 182 ரன்களும், ஆலி போப் 205 ரன்களும் எடுக்கவே 524 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 2ஆவது இன்னிங்ஸை ஆடிய அயர்லாந்து அணிக்கு மார்க் அடையர் 88 ரன்களும், அண்டி மெக்ப்ரைன் 86 ரன்களும் எடுக்கவே 9 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் எடுத்தது.
16 வைடு எதிரொலி: ஓரங்கட்டப்பட்ட மதீஷா பதிரனா: இலங்கை 323 ரன்கள் குவிப்பு!
இதில், அறிமுக வீரர் ஜோஸ் டங் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். பின்னர் இங்கிலாந்து வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கிராவ்லே 3 பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இதன் மூலமாக 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மழையால் ரத்தானால் என்னாகும்?
இந்தப் போட்டியில் கேப்டனான பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் ஆடவும் இல்லை, பவுலிங்கும் வீசவில்லை. கீப்பிங்கும் செய்யவில்லை. இப்படி செய்யாமல் ஒரு கேப்டனாக இருந்து அணியை வெற்றி பெறச் செய்து புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
FA Cup Final:7ஆவது முறையாக சாம்பியான யுனைடெட் சிட்டி அணி!