எனக்கு இப்போ சிராஜ், ஷமி தான் பிரச்சனை – டேவிட் வார்னர் ஓபன் டாக்!

By Rsiva kumarFirst Published Jun 4, 2023, 4:34 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடக்கவுள்ள நிலையில், தனக்கு இப்போது பிரச்சனையாக இருப்பது முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி தான் என்று டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழாவில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக இருந்து அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல கடுமையாக போராடியவர் டேவிட் வார்னர். எனினும், 14 லீக் போட்டிகளில் 5ல் வெற்றியும், 9ல் தோல்வியும் அடைந்து ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடம் பெற்றது.

16 வைடு எதிரொலி: ஓரங்கட்டப்பட்ட மதீஷா பதிரனா: இலங்கை 323 ரன்கள் குவிப்பு!

ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் 7ஆம் தேதி ஓவல் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதையடுத்து ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்க்கு இடையிலான ஆசஸ் டெஸ்ட் தொடர் நடக்க இக்கிறது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் வரும் 2024 ஆம் ஆண்டு சிட்னியில் நடக்க உள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற இருப்பதாக அறிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மழையால் ரத்தானால் என்னாகும்?

இந்த நிலையில் WTC Final மற்றும் ஆசஸ் தொடர்களில் பந்து வீச்சாளர்கள் குறித்து டேவிட் வார்னர் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் இப்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக கவனம் செலுத்துகிறேன். இதில் முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தான் எனது மனதில் இருக்கிறார்கள்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தான் எங்களுக்கு முக்கியம். அதன் பிறகு தான் ஆசஸ் டெஸ்ட் தொடர். இதில், இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் பற்றி கவலைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

FA Cup Final:7ஆவது முறையாக சாம்பியான யுனைடெட் சிட்டி அணி!

click me!