இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் 7ஆம் தேதி நடக்கிறது. இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்தப் போட்டி நடக்கிறது. இதற்கான இந்திய வீரர்கள் ஒவ்வொரு பேட்ஜாக இங்கிலாந்து சென்றனர். புதிய ஜெர்சியுடன் இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
FA Cup Final:7ஆவது முறையாக சாம்பியான யுனைடெட் சிட்டி அணி!
இந்தப் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா, ரிஷப் பந்த், கேஎல் ராகுல் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். இந்தப் போட்டி டிரா ஆனால், இரு அணிகளும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட், 2024 டி20 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறும் டேவிட் வார்னர்!
ஒருவேளை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மழையால் பாதிக்கபட்டார். ரிசர்வ் என்று மறுநாள் போட்டி நடத்தப்படும். அப்படியும் அந்த நாளிலும் மழையின் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டால் இந்தியா மற்றும் அஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
ஆடுகளத்திலிருந்து பலிபீடம் வரையில் பயணம் தொடங்குகிறது – ருதுராஜ் கெய்க்வாட் உட்கர்ஷா பவார் திருமணம்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம். இந்தப் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சட்டேஸ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், இஷான் கிஷான்.
காத்திருப்பு வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், சூர்யகுமார் யாதவ்
புதிய ஜெர்சியுடன் போட்டோஷூட் எடுத்த இந்திய வீரர்கள்: வைரலாகும் புகைப்படம்!