பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் 2024 டி20 உலகக் கோப்பையுடன் தான் ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் அறிவித்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி வருபவர் டேவிட் வார்னர். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரையில் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வார்னர் 8,158 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 34 அரைசதம் மற்றும் 25 சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 335 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
ஆடுகளத்திலிருந்து பலிபீடம் வரையில் பயணம் தொடங்குகிறது – ருதுராஜ் கெய்க்வாட் உட்கர்ஷா பவார் திருமணம்!
இதே போன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டி போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான வார்னர் இதுவரையில் 99 டி20 போட்டிகளில் விளையாடி 2,894 ரன்கள் வரையில் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 100* ரன்கள் எடுத்துள்ளார். மேலும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் மூலமாக ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரையில் 142 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வார்னர் 6,030 ரன்கள் எடுத்துள்ளார்.'
புதிய ஜெர்சியுடன் போட்டோஷூட் எடுத்த இந்திய வீரர்கள்: வைரலாகும் புகைப்படம்!
இதில், 19 சதங்களும், 27 அரைசதங்களும் அடங்கும். பல போட்டிகளில் கேப்டனாகவும் இருந்துள்ளார். கேப்டனாக 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 3 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார். அதோடு, 9 டி20 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளார். இது தவிர ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாகவும் திகழ்ந்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து தனி ஒருவனாக போராடியுள்ளார். பதினாறாவது ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 516 ரன்கள் எடுத்துள்ளார்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணிக்கு புதிய ஜெர்சி! ஆஸி.யை வீழ்த்த ராசியாக இருக்குமா?
இந்த நிலையில் டேவிட் வார்னர் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தான் நான் விளையாடப்போகும் கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும் என்று எப்போதும் சொல்லி வந்திருக்கிறேன். எனது திட்டமும் அது தான்.
ரயில் விபத்து குறித்து கேள்விப்பட்டு வேதனை அடைந்தேன் – விராட் கோலி!
இதே போன்று வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிட்னியில் நடக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கடைசியாக விளையாட விரும்புகிறேன். இந்தப் போட்டியுடன் எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்வேன். பாகிஸ்தான் தொடரைத் தொடர்ந்து அடுத்து நடக்கவுள்ள வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டேன் என்று கூறியுள்ளார். ஆதலால், எனது கவனம் முழுவதும் வெள்ளை நிற பந்துகளில் தான் இருக்கும். அதாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.