எதிரணியின் எந்த வீரரை உங்க டீமுக்கு எடுப்பீங்க..? அனைத்து கேப்டன்களின் அதிரடி பதில்.. இதுலகூட இங்கிலாந்து கேப்டன் செம ஸ்மார்ட்

By karthikeyan VFirst Published May 24, 2019, 2:46 PM IST
Highlights

எதிரணியிடமிருந்து(எந்த அணியாக வேண்டுமானால் இருக்கலாம்) ஒரு வீரரை நீங்கள் உங்கள் அணிக்கு எடுத்துக்கொள்ளலாம் என்றால் யாரை எடுப்பீர்கள் என்று அனைத்து கேப்டன்களிடமும் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. 
 

உலக கோப்பை இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளன. 

1992ம் ஆண்டு உலக கோப்பையை போல இந்த முறை, அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோத உள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த உலக கோப்பையில் விராட் கோலி, வில்லியம்சன், வார்னர், பேர்ஸ்டோ, பட்லர், ஸ்மித், ரோஹித் சர்மா, பும்ரா, ரஷீத் கான், ரபாடா என பல சிறந்த வீரர்கள் ஆடுகின்றனர்.

உலக கோப்பைக்கு முன்னதாக பயிற்சி போட்டிகளில் அனைத்து அணிகளும் ஆடிவருகின்றன. இதற்கிடையே அனைத்து கேப்டன்களுக்கான சந்திப்பு நடந்தது. அதில் அனைத்து அணிகளின் கேப்டன்களும் கலந்துகொண்டனர். பின்னர், அவர்களிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது, எதிரணியிடமிருந்து(எந்த அணியாக வேண்டுமானால் இருக்கலாம்) ஒரு வீரரை நீங்கள் உங்கள் அணிக்கு எடுத்துக்கொள்ளலாம் என்றால் யாரை எடுப்பீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு அனைத்து கேப்டன்களும் அளித்த பதில்:

1. இலங்கை கேப்டன் கருணரத்னே - ஸ்டோக்ஸ்

2. தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ் - பவுலிங்கிற்கு ரஷீத் அல்லது பும்ரா, பேட்டிங்கிற்கு விராட் கோலி

3. நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் - ரஷீத் கான்

4. பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது - ஜோஸ் பட்லர்

5. வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் - எங்கள் அணியே நன்றாகத்தான் இருக்கிறது. யாரையும் எடுக்க வேண்டிய தேவையில்லை.

6. வங்கதேச கேப்டன் மஷ்ரஃபே மோர்டஸா - விராட் கோலி(இதோ அவருதான் என கோலியை சுட்டிக்காட்டி சொன்னார்)

7. ஆஃப்கானிஸ்தான் கேப்டன் குல்பாதின் நைப் - அன்றைய குறிப்பிட்ட நாள் மற்றும் ஆட்டத்தை பொறுத்தது

8. ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் - ரபாடா

9. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி - டுபிளெசிஸ்

அனைத்து கேப்டன்களும் இவ்வாறு கூற, இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் யாருமே எதிர்பார்த்திராத வகையில் ஒரு பதிலை கூறினார். எந்த வீரரையும் எடுக்க விரும்பவில்லை. ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கை எங்கள் அணியின் பயிற்சி குழுவில் எடுப்பேன் என்று பதிலளித்தார். 
 

click me!