ஆண்ட்ரே ரசலின் பவுன்ஸரில் அடிபட்டு வெளியேறிய ஆஸ்திரேலிய வீரர்!! உலக கோப்பைக்கு முன் பரபரப்பு

By karthikeyan VFirst Published May 24, 2019, 2:04 PM IST
Highlights

230 ரன்கள் என்ற இலக்கை 39வது ஓவரிலேயே எட்டி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 

உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. அதற்காக அனைத்து அணிகளும் இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளன. 

உலக கோப்பைக்கு முன்னதாக பயிற்சி போட்டிகள் நடந்துவருகின்றன. இதில் ஆஸ்திரேலியாவும் வெஸ்ட் இண்டீஸும் மோதிய பயிற்சி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 229 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

230 ரன்கள் என்ற இலக்கை 39வது ஓவரிலேயே எட்டி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்ஸில் இரண்டாவது ஓவரில் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜாவுக்கு ஆண்ட்ரே ரசல் ஒரு பவுன்ஸர் வீசினார். அந்த பவுன்ஸரின் லெந்த்தை சரியாக கணிக்கத் தவறினார் உஸ்மான் கவாஜா. அதனால் அந்த பந்து வேகமாக அவரது முகப்பகுதியில் ஹெல்மெட்டில் தாக்கியது. 

அதனால் உடனடியாக ரிட்டயர்ட் ஹட் செய்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்டது. அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் அணிக்கு திரும்புவார் எனவும் சக வீரரான ஷான் மார்ஷ் தெரிவித்துள்ளார். அதிர்ஷ்டவசமாக உஸ்மான் கவாஜாவிற்கு எந்த விதமான பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை. 

வார்னர் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பிய பிறகும் கூட உஸ்மான் கவாஜா தான் தொடக்க வீரராக களமிறங்கினார். அந்தளவிற்கு கடந்த ஓராண்டாக சிறப்பாக ஆடி ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ளார். அவர் உலக கோப்பையில் ஆடுவது அவசியம் என்பதால் அவர் முழு உடற்தகுதியுடன் இருப்பது அவசியம். அந்தவகையில், அவருக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாதது ஆஸ்திரேலிய அணிக்கு நல்ல விஷயம். 
 

click me!