டிவில்லியர்ஸ் இல்லைனா என்ன..? கிரிக்கெட்டுக்கு இன்னொரு மிஸ்டர் 360 கிடைச்சுட்டாரு.. பாண்டிங்கின் பாராட்டை வாங்கிய அதிரடி வீரர்

By karthikeyan VFirst Published May 24, 2019, 12:47 PM IST
Highlights

மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை அடித்து தெறிக்கவிட்டதால் மிஸ்டர் 360 என பெயர் பெற்றவர் தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸ்.
 

மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை அடித்து தெறிக்கவிட்டதால் மிஸ்டர் 360 என பெயர் பெற்றவர் தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸ்.

தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி வீரராக திகழ்ந்த டிவில்லியர்ஸின் சிறப்பம்சமே, எந்த பந்தையும் எந்த திசையிலும் அடிக்கக்கூடிய திறன் பெற்றவர். தனது அபாரமான பேட்டிங்கால் சொந்த நாட்டில் மட்டுமல்லாமல் உலகளவில் ரசிகர்களை பெற்ற சிறந்த வீரர் டிவில்லியர்ஸ். 

டிவில்லியர்ஸ் இந்த உலக கோப்பையில் ஆடி, 2015ல் நழுவிய கோப்பையை இந்த முறை வென்று கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக கடந்த ஆண்டு திடீரென ஓய்வு அறிவித்தார். அவரது ஓய்வு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

டிவில்லியர்ஸின் மிஸ்டர் 360 பட்டத்தை அவருக்கு அடுத்து தன்வசப்படுத்தியுள்ளார் இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர். இங்கிலாந்து அணி கடந்த சில ஆண்டுகளாக ஆக்ரோஷமாக ஆடி வெற்றிகளை குவித்துவருகிறது. அதனால்தான் இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக கருதப்படுகிறது. 

இங்கிலாந்து அணியின் அபாரமான வெற்றிகள், பேர்ஸ்டோ, பட்லர், இயன் மோர்கன் ஆகிய அதிரடி வீரர்களின் அசாத்தியமான பேட்டிங்கால்தான் சாத்தியப்படுகிறது. பட்லர் 2018 ஐபிஎல்லுக்கு பிறகு அபாரமாக ஆடிவருகிறார். அந்த ஐபிஎல்லில் சிறப்பாகா ஆடிய பட்லர், அதன்பின்னர் 3 விதமான போட்டிகளிலும் மிரட்டிவருகிறார். அவரது ஃபார்ம் இங்கிலாந்து அணிக்கு கூடுதல் பலம். 

ஜோஸ் பட்லர் ஆர்தோடக்ஸ் கிரிக்கெட்டர் அல்ல. பட்லரும் டிவில்லியர்ஸை போலவே, சில அசாத்தியமான ஷாட்டுகளால் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை பறக்கவிடுகிறார். அவர் அடுத்த மிஸ்டர் 360 என பெயர் பெற்றுள்ளார். அதை ரிக்கி பாண்டிங்கே அங்கீகரித்திருப்பது பட்லரும் பெரிய பாராட்டுதான். 

பட்லர் குறித்து பேசிய பாண்டிங், உலக கோப்பையில் பட்லர் தான் இங்கிலாந்து அணியின் அபாயகரமான வீரர். அவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அபாரமாக ஆடிவருகிறார். மைதானத்தின் 360 டிகிரியிலும் அவர் ஸ்கோர் செய்துள்ளார். மிடில் ஆர்டரில் அசாத்தியமாக பேட்டிங் ஆடி எதிரணிகளை தெறிக்கவிடுகிறார் என பாண்டிங் பாராட்டியுள்ளார். 
 

click me!