எல்லாரும் சொல்றதால மட்டுமே அவங்க ஜெயிச்சுருவாங்களா..? களத்துல இறங்கி கடுமையா ஆடணும்.. செம கடுப்பான சீனியர் வீரர்

By karthikeyan VFirst Published May 24, 2019, 11:40 AM IST
Highlights

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் ஒருநாள் போட்டிகளில் ஆக்ரோஷமாக ஆடி கடந்த 2 வருடங்களாக வெற்றிகளை குவித்துவருகின்றன. 

உலக கோப்பை இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். 1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பையில் தான் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோத உள்ளன. அதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் ஒருநாள் போட்டிகளில் ஆக்ரோஷமாக ஆடி கடந்த 2 வருடங்களாக வெற்றிகளை குவித்துவருகின்றன. இந்த இரண்டு அணிகளும் நல்ல ஃபார்மில் அபாரமாக ஆடிக்கொண்டிருப்பதாலும் வலுவான அணிகளை பெற்றிருப்பதாலும் இந்த 2 அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என்று அனைத்து ஜாம்பவான்களும் கருத்து தெரிவித்துவருகின்றனர். 

இந்த கருத்துகளால் கடுப்பான வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹாசன், விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் தற்போதைய கிரிக்கெட்டை ஆண்டு கொண்டிருக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இரு அணிகளுமே உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகள் தான். ஆனால் அந்த அணிகள் ஒன்றுதான் வெல்லும் என்று முத்திரை குத்தப்படுவதால் மட்டுமே கோப்பையை வென்றுவிட முடியாது. 

கோப்பையை வெல்ல வேண்டுமென்றால் காகிதத்தில் ஆடுவது முக்கியமல்ல. களத்தில் இறங்கி கடினமாக ஆட வேண்டும். அன்றைய நாளில் சிறப்பாக ஆடும் அணிக்கே வெற்றி. ஆஸ்திரேலிய அணி பொதுவாகவே உலக கோப்பையில் சிறப்பாக ஆடுவார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணி சரியான நேரத்தில் வெகுண்டெழுந்துள்ளது. வங்கதேச அணியும் சிறப்பாகவே உள்ளது. அதனால் அனைத்து அணிகளுமே எதையும் சமாளிப்பதற்கு தயாராகவே இருக்கிறது. இந்த முறை எங்களுக்கும் வாய்ப்பிருப்பதாகவே கருதுகிறேன். தொடர் எப்படி ஆடப்படுகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப தொடர்ந்து சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் என்று ஷாகிப் தெரிவித்துள்ளார். 
 

click me!